திருமண ஒழுங்குகள்

Print

          இஸ்லாமிய   திருமணம் 


இஸ்லாத்தில் எந்த ஒரு விடயத்தை செய்தாலும் அது அல்குரானிலோ, ஹதீஸிலோ சொல்லப்பட்டிருக்க   வேண்டும். இது தவிர்ந்த முறையில் செய்யப்படுபவை இஸ்லாமிய காரியமாகாது.

"நமது கட்டளை இல்லாமல் ஏதேனும் ஒரு காரியத்தை செய்தால் அது நிராகரிக்கப்படும்"  முஸ்லிம்-3243

இன்று முஸ்லிம்கள் நடத்தும் அதிகமான திருமணங்கள் இஸ்லாமிய வரையறைகளுக்கு உட்பட்டதாக இல்லை.

 கல்யாண திகதியை குறிப்பதக்கு நாள், நட்சத்திரம் பாக்கும் வழக்கம் இன்னும் பல பகுதிகளில் காணப்படுகிறது. இவ்வாறு செய்வதை ரசூல் (ஸல்) அவர்கள் கடுமையாக  கண்டித்துள்ளார்கள்

 

"ஒருவன் குறிசொல்பவனிடமோ,ஜோதிடனிடமோ சென்று அவன் கூறுபவற்றை நம்பினால்  அவன் நிச்சயமாக முஹம்மதாகிய எனக்கு அருளப்பட்ட இம்மார்க்கத்தை நிராகரித்தவனேஆவான்"             அஹ்மத்-9171எனவே இவ்வாறான மூட நம்பிக்கைகளில் இருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும்.  மணமகனை  தேர்வு   செய்யும் பொழுது  பணம்   இருக்கிறதா, 
நல்ல குடும்பமா என்றுதான் பெண் வீட்டார் பாக்கின்றார்கள். மணமகனிடம் சரியான மார்க்கம் இருக்கிறதா என்று பார்ப்பதில்லை. அதே போல் மணப்பெண்ணை   தேர்ந்து எடுக்கும் பொழுதும் நம்மில் அதிகமானவர்கள் பணம் இருக்கிறதா, அழகு இருக்கிறதா என்றுதான் பாக்கிறார்களே தவிர மார்க்கப்பற்றுள்ள பெண் தான் வேண்டும் என்று பார்ப்பதில்லை.


ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

 "நான்கு (நோக்கங்களு)க்காக  ஒரு   பெண்மணமுடிக்கப்படுகிறாள்:
(1)அவளது செல்வத்திற்காக. (2)அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக. (3)அவளது அழகிற்காக. (4)அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. ஆகவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து)கொண்டு வெற்றி அடைந்துகொள்! (இல்லையேல்) உன்னிரு  கரங்களும்  மண்ணாகட்டும்" முஸ்லிம்-2905


ரசூல் (ஸல்) அவர்கள் இங்கே இரண்டு முக்கிய விடயங்களை சொல்கிறார்கள். ஒன்று மார்க்க நல்லொழுக்கமுள்ள பெண்ணை மணந்தால் மட்டும் தான் வெற்றிபெற முடியும் என்பதையும். இரண்டாவதாக அப்படி செய்யா விட்டால் இரு கைகளும் மண்ணாகட்டும் என்றும்  சொன்னார்கள்.


இது ஆண்களுக்கு மட்டும் விட்ட கட்டளை கிடையாது. பெண்களாயினும் தனது கணவனை தெரிவு செய்யும் போது இதைக்கடைப்பிடிக்க வேண்டும்.

அடுத்து கடைபிடிக்க வேண்டிய முக்கியமான ஒழுங்கு சிக்கனம், எழிமை நம்மளால் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு திருமண செலவைக்குறைக்க வேண்டும். மிக மிக குறைந்த செலவிலே திருமணம் செய்ய வேண்டும் என்று ரசூல் (ஸல்) அவர்கள் வளியுரித்தியுல்லார்கள். "ரசூல்(ஸல்) அவர்கள் சொன்னார்கள்    "குறைந்த   செலவில்          நடத்தப்படும் திருமணமே அதிகம் பரகத் நிறைந்ததாகும்"   

 அஹ்மத்- 23388


எனவே எவ்வளவு குறைத்து செய்கிறீர்களோ அவ்வளவுக்கு பரகத் (கண்ணுக்கு தெரியாத அருள்)  இருக்கிறது  என்றார்கள்.

அப்துர்  ரஹ்மான்  இப்னு அஃப் (ரலி) அவர்கள் மிகப்பெரிய செல்வந்தர், சுவர்க்க வாசி என்று நற்செய்தி கூறப்பட்ட பத்து பேர்களில் ஒருவர், நபிகள் நாயகத்தின் மேல் உயிரையே வைத்திருந்தவர்,  நபிகள் நாயகத்துக்காக வேண்டி ஹிஜ்ரத் செய்து, பல தியாகங்கள் செய்து வந்தவர், சில போர்களில் நபிகள் நாயகத்துக்கு வரும் அம்புகளை தமது நெஞ்சுகளில் தாங்கி நபிகள் நாயகத்துக்காக உயிரைக்கொடுக்க முன்வந்தவர் மேலும் நபிகள் நாயகம் அன்று ஆட்சித்தலைவரும், ஆன்மீகத்தளைவருமாகவும் இருந்தார். அப்படிப்பட்ட தோழர் கல்யாணம் செய்கிறார் ரசூல் (ஸல்) அவர்களைக்கூப்பிடாமல்.

 

"அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி  நறுமணப் பொருளின் (மஞ்சள்) கறையுடன் வந்தார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் 'என்ன விசேஷம்?' எனக் கேட்டார்கள். அதற்கவர், 'இறைத்தூதர் அவர்களே! நான் ஓர் அன்ஸாரிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டேன்!" என்றார். நபி(ஸல்) 'அவருக்கு என்ன மஹர் கொடுத்தீர்?' எனக் கேட்டார்கள். 'ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்!" என அவர் பதில் கூறினார். அதற்கு 'ஓர் ஆட்டையேனும் மணவிருந்ததாக அளிப்பீராக!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்"    புகாரி-2049    


அல்லாஹ்வின் தூதரையே கூப்பிடவில்லை என்றால் யாரைக்கூப்பிட்டிருப்பார்கள் பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் சேர்ந்து ஒப்பந்தம் செய்திருப்பார்கள்.

 மேலும் பள்ளி நிர்வாகத்திக்கு, மொலவிக்கு சொல்லவேண்டும் என்பது மார்க்கத்தில் இல்லாத விடயம்.

திருமனத்தைப்பொருத்தவரை மணமகன், மணப்பெண், மனப்பெண்ணுக்கு ஒரு பொறுப்பாளி, இரண்டு சாட்சி மொத்தமாக ஐந்து பேர்தான் தேவை. இவ்வாறு செய்யும் திருமணம்  நாட்டுச்சட்டப்படியும், மார்க்கச்சட்டப்படியும் அங்கீகரிக்கப்படும்.

திருமணத்தால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான் இதைக்கருத்தில் கொண்டு இஸ்லாம் பெண்களுக்கு மஹர் தொகையைக்கொடுக்கச்சொல்கிறது. சாட்சிகளின் முன் வார்த்தைகளாலே ஒப்பந்தம் நிறைவேறுகின்றது. மணப்பெண்ணின் பொறுப்பாளர் மணப்பெண்ணின் அனுமதியுடன் கேட்க வேண்டும் இவ்வளவு மஹ்ரை பெற்றுக்கொண்டு இன்னின்னார்            சாட்ச்சிகளின்   முன்னிலையில் மனமுடித்து  தருகிறேன். ஒப்புக்கொள்கிறீர்களா? என்று மனமகனிடம் கேட்கப்படும். மணமகன் ஆம் ஒப்புக்கொள்கிறேன் என்ற சொன்னதும் திருமணம் நிறை வேறி விட்டது.

திருமனச்செலவை மனமகன் தான் ஏற்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது. திருமச்செளவு என்பது மஹ்ரையும், வலீமாவையுமே குறிக்கிறது. எனவே பெண் வீட்டார் கொடுக்கும் விருந்து அல்லது பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருடன் இணைந்து செய்யும் விருந்து மார்க்க்கதில் அனுமதி இல்லாத விடயம். வலீமாவுக்கான பொறுப்பை அல்லாஹ் மணமகனுக்கு சாட்டியிருக்கும் பொழுது இதற்கு மாற்றமாகச்செய்வது அல்லாஹ்வின் வசனத்தை கேலிசெய்த குற்றத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகிறது.  இது பற்றி அல்லாஹ்  பின்வருமாறு எச்சரிக்கிறான். 

 

"அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே"    அல்குரான்-4-140

 

உதாரணமாக ஒரு சபையில் மதுபானம் அருந்தும் போது நாம் அருந்தாமல் அந்த சபையில் உட்கார்ந்தாலும்  அல்லாஹ்வின் பார்வையில் நாமும் மது அறுந்தினவர் செய்த குற்றம் போன்ற பாவம் நமக்கும் உண்டு. அல்லாஹ் தடுத்ததை செய்வதை அல்லாஹ் தனது வசனத்தை கேலி செய்ததாக எடுத்துக்கொள்கிறான்.

 

சில பெண் வீட்டவர் என்ன நினைக்கிறார்கள் என்றால்  எனது உறவினர்களுக்கு சொல்லாவிட்டால் அவர்கள் கோபிப்பார்கள், குறை சொல்வார்கள் மேலும் உறவைப்பேணி நடக்காவிட்டால் சுவர்க்கம் செல்ல முடியாது என்று ரசூல்  (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள் என்றும் கூறி மார்க்க பற்று உள்ளவர்களும் கொஞ்சம் சருகி பெண்வீட்டு விருந்து கொடுப்பதைப்பாக்கின்றோம்.

 

அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விடயத்தில் உறவைப்பேணி நடத்தல், பெற்றோருக்கு கட்டுப்படுதல் என்பது இஸ்லாத்தில் கிடையாது. 

 

'ரசூல் (ஸல்) அவர்கள் தனது மகள் பாத்திமா (ரலி) அவர்கள் மீது உயிரையே வைத்திருந்தார்கள் இருந்தும்

"விருந்துக்கு சென்று வாசலில் சொங்கவிடப்பட்ட உருவத்திரையை கண்டு திரும்பி விட்டார்கள் பின்னர் பாத்திமா (ரலி) வினவும் போது உருவப்படம் இருக்கும் வீடுகளுக்கு மலக்குகள் வரமாட்டார்கள்" என ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' நஸாயீ-5351

 

 வேறு சிலர் நினைக்கிறார்கள் எங்களுக்கு பெண் பிள்ளைகள் தான் உள்ளது நாம் எப்படி அக்கம் பக்கத்திலுள்ளவர்களையும்,  தெரிந்தவர்களையும் அழைத்து கல்யாண விருந்து கொடுப்பது என்று. நாம் தெளிவாகப்புரிந்து கொள்ள வேண்டும் நமது கண்ணோட்டத்தில் எவ்வளவு சிறந்த செயலாகத்தென்பட்டாலும் அல்லாஹ்வும், ரசூலும்

அனுமதித்தில்லாவிட்டால் அதை செய்யமுடியாது. அல்லாஹ் குரானில் சொல்கிறான்

 

"அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்தவர் தெளிவாக வழிகேட்டு விட்டார்" அல்குரான்-33:36

 

அத்தோடு கெட்ட விடயம் கூட சமூகத்தில் பல காலமாக இருக்கும் போதும், எல்லோரும் செய்யும் போதும் அது சரி போல் நமக்கு தென்படும்.  இன்னும் சிலர் பெண்வீட்டு விருந்தை நியாயப்படுத்த கீழ் கண்ட ஹதீஸை சுட்டிக்காட்டுகின்றனர். 

 

"அபூ உசைத் அஸ்-ஸாஇதீ (ரழி) (தம்) மணவிருந்தின்போது நபி (ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் அழைத்தார்கள். இவர்களுக்காக உணவு படைத்ததும் பரிமாறியதும் அபூ உசைத் (ரலி) அவர்களின் துணைவியார் உம்மு உசைத் (ரழி) அவர்களே. உம்மு உசைத் (ரலி) (முந்தைய நாள்) இரவிலேயே கல் பாத்திரம் ஒன்றில் பேரீச்சங்கனிகள் சிலவற்றை ஊறப்போட்டு வைத்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு முடிந்தவுடன் அவர்களுக்காக உம்மு உசைத் (ரழி) அந்தப் பேரீச்சங்கனிகளை(த் தம் கரத்தால்) பிழிந்து அன்பளிப்பாக வழங்கினார்கள்" 

புஹாரி-5182

 

இந்த ஹதீஸிலிருந்து பெண் விருந்து கொடுக்கலாம் என்று புரிவது தவறு, காரணம், இதில் மணப்பெண் கணவனது வலீமாவில் வருவோருக்கு பரிமாறலாம், வலீமா  ஏற்பாடுகளில் உடலுழைப்பு செய்யலாம் என்பதையே சட்டமாக எடுக்க முடியும்,

 

இங்கு விருந்துக்கு நபிகளாரை அழைத்தது யார்? மணமகனா? மணமகளா?

மணமகன் தான் அழைக்கிறார் என்பதிலிருந்தே அது மணமகன் போடும் விருந்து என்பது தெளிவாகவில்லையா?

 

வலீமாவை சிலர் வாரங்கள்,மாதங்கள் கடந்து கொடுக்கிறார்கள். இது தவறாகும் மார்க்கத்தில் இத்தனை நாட்களுக்குள் கொடுக்க வேண்டுமென்று சொல்லப்படவில்லை, ஆனாலும் சில அறிஞ்ஞர்களின் கருத்து திருமணப்பந்தம் செய்து மூன்று நாளைக்குள் கொடுப்பது சிறந்தது என்று. ஏனெனில் எந்த ஒரு சந்தோஷமும் மூன்று நாளைக்கு பின் குறைந்து விடும் மேலும் ரசூல் (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவுப் விடயத்திலும் மனம்முடித்தார் என்று சொன்னதும் மனவிருந்தைக்கொடுத்து விடு என்றார்கள்.

 

மணமகனின் செல்வச்செழிப்புக்கு ஏற்ப மனவிருந்து கொடுப்பது தடுக்கப்படவில்லை. ஆடல், பாடல்,அனாச்சாரம் மார்க்கத்துக்கு முரணானவை இல்லாமல் அதிகமாவர்களை விருந்திக்கு அழைக்கலாம்.  அவ்வாறு அழைக்கும் போது ஒரு மண்டபம் கூட தேவைப்படலாம் அவ்வாறு மண்டபத்தில் வைத்து கொடுப்பதையும் இஸ்லாம் தடுக்கவில்லை. எனவே இவ்வாறு அதிகமாணவர்களுக்கு  உணவளிப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை அனுமத்ததுதான் இருந்தாலும் சிறந்தது குறைந்த  நபர்களை அழைத்து மிக மிக சிக்கனமாக செய்வது. 

   

மேலும் நமது வலீமா விருந்தானது ஏழை, எளியவர்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அத்தோடு விருந்து அழைப்பை எல்லோரும் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ரசூல் (ஸல்) அவர்கள் சொல்லியுள்ளார்கள்.

 

"ஏழைகளைவிட்டுவிட்டு, செல்வந்தர்கள் மட்டுமே அழைக்கப்படும் வலீமா - மணவிருந்து உணவே உணவுகளில் மிகத் தீய தாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தவராவார்"   புகாரி-5177


எனவே அல்லாஹ்வும் அவனது  தூதரும்  காட்டித்தந்த வழியில் இஸ்லாமியத்திருமனங்களை அமைத்துக்கொள்வோம், இவ்வாறு நமது, நமது வீட்டுத்திருமங்களை அமைத்துக்கொண்டால் அந்த  மனத்தம்பதிகளுக்கு   அவர்களின் செல்வங்களுக்கு அல்லாஹ் பரகத்  செய்வதாக உத்தரவாதம் தருகிறான்.

                                                

News flash

 •  ஜனாஷாவிட்கு செய்ய வேண்டிய கடமைகள்

   

  =========================

  அஸ்ஸலாமு அழைக்கும் 

  ஆண்களுக்கான மார்க்க வகுப்பு 

  திங்கள் கிழமை மாலை 7:30 மணி முதல் 9:30 மணி வரை 

  Langley Green Community Centre ல்

  நடைபெறும் உங்கள் அனைவரையும் 

  அன்புடன் அழைக்கின்றோம்  

Events

Prayer Timetable

 If you cant View this
Download Adobe reader

Latest video

Can't get data from youtube.
Probable causes listed below:

1. Youtube username or Playlist is not valid with your selection. Please set the parameters correctly from module manager

2. It might also be a problem with CURL library or your server config

Reply from youtube:

No longer available

Facebook Like Box

You Are

0392470
Today
Yesterday
This Week
Last Week
This Month
Last Month
All days
88
139
1082
388638
2866
3954
392470

Your IP: 54.162.15.31
Server Time: 2018-09-23 01:06:16