பிறை பார்க்காமல் பெருநாள் கொண்டாடலாமா?

Print

பிறை பார்க்காமல் பெருநாள்

கொண்டாடலாமா? 

இஸ்லாத்தில் உள்ள சட்டதிட்டங்கள் அனைத்தையும் தெளிவுபடுத்தவே நபிகள் நாயகம் (ஸல்) அனுப்பப்பட்டார்கள். அவரும் அவருடைய தூதுத்துவத்தை முளுமைப்படுத்தினார்கள்.
மார்க்கத்தில் பிறையையும் முடிவு செய்வது எப்படி என்பதை அல்லாஹ்வும், ரசூல் (ஸல்) அவர்களும் தெள்ளத்தெளிவான வாசஹங்களினால் தெளிவு படுத்தியுள்ளார்கள்.

 

“இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்”.

குர்ஆன் - 2:185

 

 

 

பிறை சம்பந்தமான முக்கியமான சான்றாக இந்த வசனம் அமைந்து உள்ளது. 

 

திருக்குர்ஆன் ஏகஇறைவனின் வார்த்தை என்பதை நாம் அறிவோம். மனித வார்த்தைகளில் காணப்படும் தவறுகள் இறைவனின் வார்த்தைகளில் இருக்காது, இருக்கவும் முடியாது. 

 

தேவையில்லாத ஒரு சொல் கூட அதில் இடம் பெறாது என்பதில் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அழுத்தமான நம்பிக்கை உண்டு. இந்த நம்பிக்கையை மனதில் இருத்தி இந்த வசனத்தை ஆராய்வோம். 

 

உங்களில் யார் ரமளான் மாதத்தை அடைகிறாரோ அவர் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது கடமை. 

 

என்ற சொற்றொடரில் உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வாசகம் இல்லாமலே ரமளானில் நோன்பு நோற்பது கடமை என்ற கருத்து கிடைத்து விடும். 

 

அப்படியானால் இந்தச் சொற்றொடரின் பயன் என்ன? நடைமுறை வழக்கத்தில் இது போன்ற வார்த்தைகளை யாருமே பயன்படுத்துவதில்லை. அல்லாஹ்வின் வேதத்தில் ஒரு வார்த்தையும் பொருளற்றதல்ல.

 

இதற்கு முந்தைய வசனம் கூட இது போன்ற நடையில் தான் அமைந்திருக்கிறது. 

"உங்களில் யார் நோயாளியாக இருக்கிறாரோ அல்லது பயணத்தில்இருக்கிறாரோ அவர் வேறு நாட்களில் நோன்பு நோற்கட்டும்". 

குர்ஆன் - 2:184

 

உங்களில் யார் நோயாளியாக இருக்கிறாரோ என்றால் நோயாளி அல்லாதவர்களும் உங்களில் இருப்பார்கள் என்ற கருத்து அதில் அடங்கியுள்ளது. எல்லோருமே நோயாளிகளாக இருந்தால் யார் நோயாளியாக இருக்கிறாரோ என்று பயன்படுத்த முடியாது. 

 

உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்றால் உங்களில் அம்மாதத்தை அடைந்தவர்களும் இருப்பார்கள்; அடையாதவர்களும் இருப்பார்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். 

 

நேர்வழி பெறுபவர்கள், பெறாதவர்கள் என இரு சாரார் இருக்கும் போது தான் யார் எனது வழியைப் பின்பற்றுகிறாரோ (திருக்குர்ஆன் 2:38) என்று கூற முடியும். 

 

ஹஜ்ஜை மேற்கொள்பவர்களும் ஹஜ்ஜை மேற்கொள்ளாதவர்களும் இருக்கும் போது தான் யார் ஹஜ்ஜை மேற்கொள்கிறாரோ (திருக்குர்ஆன் 2:197) என்று கூற முடியும். 

 

இந்த நடையில் இன்னும் பல வாசகங்களைக் குர்ஆனிலும், நபிமொழிகளிலும் காணலாம். மனிதர்களின் பேச்சு வழக்கிலும் இத்தகைய வார்த்தைப் பிரயோகங்களைக் காணலாம். 

 

உங்களில் யார் பொய் சொல்லாமல் இருக்கிறார்களோ அவர்களுக்குப் பரிசுகள் தருவேன் என்று மனிதர்களிடம் கூறலாம். ஆனால் மலக்குகளைப் பார்த்து உங்களில் யார் பொய் சொல்லாமல் இருக்கிறார்களோ அவர்களுக்குப் பரிசுகள் தருவேன் என்று கூற முடியாது. அவ்வாறு கூறினால் மலக்குகளில் பொய் சொல்பவர்களும் உள்ளனர் என்ற கருத்து வந்து விடும். 

 

இந்த அடிப்படையில் தான் மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனத்தையும் ஆராய வேண்டும்.

 • அம்மாதத்தை ஒருவர் அடைந்திருக்கும் போது மற்றவர் அடைந்திருக்க மாட்டார்.

 

 • ஒருவர் ரமளானை அடைந்த பின் இன்னொருவர் ரமளானை அடைவார்.

இப்படி இருந்தால் மட்டுமே யார் ரமளானை அடைகிறாரோ என்று கூற முடியும். 

 

பெருநாளும் நோன்பைப்போலவே பிறையை அடிப்படையாக வைத்து அமைந்த விடயம் என்பதால் இதே விதிதான் கொள்ளப்படுகிறது.

உலகின் ஒரு பகுதியில் பிறை காணப்பட்டால் முழு உலகுக்கும் ரமளான் or பெருநாள் வந்து விட்டது என்ற வாதத்தை இவ்வசனம் அடியோடு நிராகரிக்கிறது.

 

எல்லோரும் ஒரே நேரத்தில் மாதத்தை அடைய மாட்டார்கள் என்பது திருக்குர்ஆன் கருத்து. 

 

மேலும் இதை ரசூலுள்ளஹ்வின் கருத்து இன்னும் உறுதி செய்கிறது.

 

“பிறையை நீங்கள் காணும் போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும் போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள்”.

புகாரி-1909

 

இன்னுமொரு இடத்தில் எதிர்மறையாக சொன்னார்கள்.

 

"பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி-1906

உலகம்   முழுவதும் ஒரே நேரத்தில் மேகமூட்டம்,மழை இருப்பதில்லை. நமது பகுதியில் அவ்வாறு இருந்தால் பிறை தோன்றியிருந்தாலும்  பரவாயில்லை நீங்கள் பிறை வானில் பிறக்கவில்லை என்றே எண்ணி நாளை நோன்பு or 
பெருநாள் நாளாக நடைமுரைப்படுத்தாதீர்கள் என்பதே  நபிகள் நாயகத்தின் கட்டளையாகும். 
மேலும்   மேகமூட்டம்    ஏற்பட்டால் பக்கத்திலுள்ள உஹத் மலையில் ஏறி பாருங்கள் என்று கூட சொல்லவில்லை. எனவே  மேகமூட்டம் இருந்து  பிறை பிறந்து இறந்தாலும்    அதை பொருட்படுத்தாதே என்பதே மார்க்கத்தின் நிலைப்பாடு.

இஸ்லாமிய கணக்கின் படி மாதம் என்பது 29 அல்லது 30 நாட்களாகும். நமது  கடமை 29இல் பிறை பார்க்கவேண்டும். மேக மூட்டம் அல்லது வேருகாரனன்களால் பிரை தென்படா விட்டால் 30ஆக மாதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

 

மாதத்திக்கு 29நாட்கலாகும் எனவே பிறையை காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மேகமூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை 30ஆக முளுமைப்படுத்துங்கள்". 


புஹாரி-  1907

 

சிலரின் வாதப்படி ரமலான் தலைப்பிறை பிறந்ததும் உலகுக்கே பிரை பிறந்தததாக வாதிடுகின்றனர் இதுஎவ்வளவு மடத்தனம் என்பதை பாருங்கள். 
உதாரணத்துக்கு சவுதி  ஷஹ்பான் 29 மாலை 7 மணிக்கு ரமலான் பிறையை கண்டால் உலகின் மறு  பக்கத்தில்  இருக்கும் அமெரிக்காவில் காலை 7மனி 
அமெரிக்கர்கள்  உடனே நோன்புநோக்கவேண்டும்.  ஏனெனில் அல்லாஹ் சொல்கிறான் "யார் ரமலானை அடைகிறாரோ அவர் நோன்பு நோக்கட்டும்"
எனவே இவர்களின் வாதப்படி இது எப்படி சாத்தியமாகும். மேலும் ரசூல் (ஸல்) சொன்னார்கள்.

 

“நோன்பு பிடிக்கும் முடிவை யார் இரவிலேயே எடுக்கவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை'' .

அறிவிப்பவர்: ஹஃப்ஸா (ரலி)

நூல்: நஸயீ

இதைப்போலவே பெருநாளையும் இவர்களின் வாதப்படி கொண்டாடுவதாக இருந்தால் 
சவூதி மலை 7 மணிக்கு ஷவ்வால் 1ம் பிறையை காணும் போது அமெரிக்கர்கள் காலை 7மனி எனவே அமெரிக்கர்கள் நோன்பை விட்டுவிட்டு பெருநாள் தொழவேண்டும். 

பிறை உலகிற்கு பிறந்தது என்பதல்ல விடயம் அது நாமிருக்கும் பகுதிக்கு வந்ததா என்பதே விடயம். இதை பின்வரும் ஹதீஸும் தெளிவுபடுத்துகிறது.

 

"உம்முல் ஃபழ்ல் (ரலி) அவர்கள் சிரியாவிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் என்னை அனுப்பி வைத்தனர். நான் சிரியாவுக்குச் சென்று அவரது வேலையை முடித்தேன். நான் சிரியாவில் இருக்கும் போது ரமளானின் தலைப்பிறை தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு நான் பிறையைப் பார்த்தேன். பின்னர் அம்மாதத்தின் கடைசியில் மதீனாவுக்கு வந்தேன். இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம் (பயணம் குறித்து) விசாரித்தார்கள். பின்னர் பிறையைப் பற்றி பேச்சை எடுத்தார்கள். நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள்?'' என்று (என்னிடம்) கேட்டார்கள். நாங்கள் வெள்ளிக்கிழமை இரவில் பிறையைப் பார்த்தோம்'' என்று கூறினேன். நீயே பிறையைப் பார்த்தாயா?'' என்று கேட்டார்கள். ஆம், (நான் மட்டுமல்ல) மக்களும் பார்த்தார்கள். நோன்பு பிடித்தார்கள். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு பிடித்தார்கள்'' என்று கூறினேன். அதற்கவர்கள் ஆனால் நாங்கள் சனிக்கிழமை இரவில் தான் பிறையைப் பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்களை முழுமையாக்கும் வரை நோன்பு பிடித்துக் கொண்டிருப்போம்'' என்றார்கள். முஆவியா (ரலி) அவர்கள் பிறை பார்த்ததும் அவர்கள் நோன்பு பிடித்ததும் உங்களுக்குப் போதாதா?'' என்று கேட்டேன். அதற்கவர்கள், போதாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தான் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்'' என்று விடையளித்தார்கள்.

முஸ்லிம்-1819

 

எனவே ஒரு பகுதியில் பிறை பார்த்தால் அது அப்பகுதியை மட்டுமே கட்டுப்படுத்தும் என்பது மார்க்கத்தில் தெள்ளத்தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

தலைப்பிறை சம்பந்தமான இன்னொரு முக்கிய தெளிவான ஆதாரத்தை பாருங்கள்.

 

“மேக மூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். பகலின் கடைசி நேரத்தில் ஒரு வாகனக் கூட்டத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விட்டுவிடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்”.

அஹ்மத்- 19670


இந்த வாகனக்கூட்டம் பக்கத்துக்கு ஊரிலிருந்துதான்  வந்திருக்க முடியும்.

மிகத் தொலைவிலிருந்து வந்திருக்க முடியாது ஏனெனில் நேற்று பிறை பார்த்துவிட்டு  இன்று காலை பயனத்தை ஒட்டகத்தில் தொடங்கியிருந்தாலும் அதே நாள் மாலை வந்து சேர்ந்துள்ளனர். 
பகலின் இருதிப்பகுதியான மக்ரிபுக்கு சிறிது நேரத்துக்கு முன் வந்துள்ளனர் என்பதும் வந்தவர்களை மாத்திரம் சிறிது நேரம்தான்  நோன்பு திறப்பதற்கு இருந்தும் வந்தவர்களுக்கு நோன்பை விடச்சொன்னதுடன் அவர்களை காலை பெருநாள் தொழவும் நபியவர்கள் சொன்னார்கள்.


பக்கத்து ஊரில் பிறை பார்த்ததை கூட ரசூலுல்லாஹ்(ஸல்)  அமுல்படுத்தவில்லை

.எந்த பகுதி பிறையை  ஏற்றுக்கொள்ளமுடியும்  என்பதை பின்வரும் ஹதீஸ் தெளியுபடுத்துகிறது.

“ரமளானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு கிராமவாசிகள் வந்து நேற்று மாலை பிறை பார்த்தோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறும், பெருநாள் தொழுகை தொழும் திடலுக்குச் செல்லுமாறும் மக்களுக்குக் கட்டளையிட்டனர்”.

அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ்

அபூதாவூத்

மேற்கண்ட பிறை தகவலை ரசூலுல்லாஹ்  ஏற்றுக்கொண்டார்கள். ஏனெனில் கிராமம் என்பது ஒவ்வொரு ஊரை சூழ்ந்துள்ள மற்றும் ஒரு ஊரைச் சார்ந்துள்ள பகுதியாகும்.

 

மேலும் சந்திரகிரகணம் ஏற்பட்டால் கிரகணம் நீங்கும் வரை தொழுமாறு ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். சவ்தியில் சந்திரகிரகம் ஏற்பட்டால் இலங்கையில் நாம் கிரகனத்தொலுகை தொழவேண்டுமா?? எங்களுக்குத்தான் கிரகணம் ஏற்படவில்லையே! சவுதியை பிரைவிடயத்தில் பின்பற்றுபவர்கள் ஏன் போன் பண்ணி இப்போது உங்களுக்கு மக்ரிபா என்று கேட்டு நோன்பு திறப்பதில்லை. 

 

 மேலும் சிலர் நோன்பின் கடைசி நாளை சக்குடைய (சந்தேகமான) நாள் என்று நோன்பை விடுகின்றனர் இது தவறாகும்.

 

மார்க்கம் என்ன சொல்கிறது என்றால் அதாவது ரமலான் நோன்பு துவங்குவதற்கு முந்தினனாலும் அதற்கு முந்தினாலும் நோன்பு பிடிப்பதை ரசூல் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளனர். 

 

“சந்தேகத்திற்குரிய நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) யார் நோன்பு நோற்கிறாரோ அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார்”

அறிவிப்பவர்: அம்மார் (ரலி)

நூல்: ஹாகிம்

இறுதியாக நமக்கு மிஞ்சியுள்ளது எப்படி  நமது எல்லையை முடிவு செய்வது என்பதாகும். அதற்கு ரசூல்(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

 

 

 

“நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்''என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ

 

ஒவ்வொரு ஊர், நாடு எல்லைகளை தீர்மானிக்கும் பொறுப்பை நம்மிடத்தில் ரசூல் (ஸல்) அவர்கள் விட்டு விட்டார்கள். 

இதேபோல தான் நாம் சுர்க்கித்தொலுவதட்கு இரண்டு நிபந்தனை உண்டு. ஒன்று 25 km மேலே பிரயாணம் செய்யவேண்டும். மற்றது ஊரைவிட்டு வெளியே செல்லவேண்டும். சிலரின் ஊர் 100km ஆக இருக்குமாயின் அதற்குள் ஒருவர் 60km பிரயானம் செய்தாலும் அவருக்கு சுருக்கி தொலமுடியாது. 

 

எனவே இது நமது நாட்டு சட்டதிட்டங்கள், எல்லைக்கேப்ப மாறுபடும் என்பதால்தான் இதை நமது கையில் ரசூலுல்லாஹ் தந்துவிட்டார்கள்.  

 

எனவே உலகில் எங்கு பிறை பார்த்தாலும் அதை வைத்து உலகம் முழுவதற்கும்  ரமலான் அல்லது பெருநாள் பிறந்துவிட்டது என்று சொல்வது இஸ்லாத்தில் இல்லாத மார்க்கம் கற்றுத்தராத விடயமாகும்.

தமது பகுதிகளில் பார்க்கப்படும் பிறை தான் நம்மைக்கட்டுப்படுத்தும் என்பதை

மேலே மிகத்தெளிவான குரான் ஹதீஸ் ஆதாரங்களினால் விளக்கியுள்ளோம்.  

 

 ஒரு பேச்சுக்கு சொல்வதென்றால் ஷாபி மதுஹாப்படியும், இலங்கை ஜமியதுல் உலமா கொள்கையின் படியும் ஒவ்வொரு நாடும் பிரைபார்கவேண்டும்.   

 

"தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்பு முரண்பட்டுப் பிரிந்து விட்டோரைப் போல் ஆகாதீர்கள்! அவர்களுக்கே கடும் வேதனை உண்டு". 

குரான்- 3:105

 

 

News flash

 •  ஜனாஷாவிட்கு செய்ய வேண்டிய கடமைகள்

   

  =========================

  அஸ்ஸலாமு அழைக்கும் 

  ஆண்களுக்கான மார்க்க வகுப்பு 

  திங்கள் கிழமை மாலை 7:30 மணி முதல் 9:30 மணி வரை 

  Langley Green Community Centre ல்

  நடைபெறும் உங்கள் அனைவரையும் 

  அன்புடன் அழைக்கின்றோம்  

Events

Prayer Timetable

 If you cant View this
Download Adobe reader