ரசூல் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டதா?

Print

சூனியத்தால்  ஏற்படும்   பாதிப்பு

 

சூனியம் என்பது நிஜம் அதனால் பிரமனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று சிலர் கருதுவதற்கு அடிப்படைக்காரணம் ரசூல் (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைத்தாக வந்துள்ள ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை சரியாக இருப்பதே.

 

ஹதீஸ் என்றால் நம்மில் அதிகமானவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள் அறிப்பாளர் வரிசை சரியாக இருந்தால் சஹீஹ் (சரி) என்று, ஹதீசுடைய அடுத்த 2 விதிகளை அறியாததுதான் இதற்குக் காரணம்.
2ம் விதி அதன் கருத்து  குரானுடன் மோதக்கூடாது. (இது அணைத்து ஹதீஸ் கலை இமாம்களினதும் கருத்து. அடுத்து நபியவர்கள் குரானுக்கு முரணாக பேச மாட்டார்கள்.) 3ம் விதி ஹதீஸின் கருத்து சரியாக இருக்கவேண்டும்.
ரசூல் (ஸல்) சொல்கிறார்கள் "என்னிடம் இருந்து ஒரு செய்தியை நீங்கள் கேள்விப்படுகிறீர்கள்  அதைக்கேட்டு உங்கள் உள்ளம் அதைவிட்டு தூரமாகிறது இதை நான் சொல்லியிருப்பேனா என்று எண்ணுகிறது அப்படிப்பட்ட ஒரு செய்தியை கேட்டால் அதைவிட்டும் நான் அதிகம் தூரமானவன்". அஹ்மத்-15478

மேலும் முஸ்லிமில் வரக்கூடிய ஹதீஸ் ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் "எனது பேரால் ஒருவர் அறிவிக்கிறார் ஒரு செய்தியை, அச்செய்தியை பார்த்தாலே தெரிகிறது பொய் என்று எனவே அச்செய்தியை அறிவிப்பவரே பொய்யர்"

ஆயிரக்கணக்கான சஹீஹ் ஹதீஸ்கல் இருக்கின்றன. அதில் 20-30 ஹதீஸ் மேல் சொல்லப்பட்ட தரத்தில் உள்ளன. அறிப்பாலர்வரிசை சரியாக இருந்தும் அவைகளின் கருத்து மற்றும் குரானுடன் மோதும் நிலையில் உள்ள சில ஹதீஸ்கலை 
உதாரணத்துக்கு இங்கு பார்ப்போம்.
ரசூல் (ஸல்) அவர்கள் பள்ளியைக்கண்டால் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். இதில் பள்ளியைக்கண்டால் கொள்ளுங்கள் என்று மாத்திரம் வந்திருந்தாள் அந்த ஹதீஸில் பிரச்சினை இல்லை.மாறாக அது இப்ராஹிம் நபியின் நெருப்புக்குளியை வாயால் ஊதி நெருப்பை அதிகப்படுத்தியது என்றும் வந்துள்ளது. 
இங்கே செயலும், கருத்தும் தவறாக உள்ளது அதோடு சாத்தியமில்லாத விடயத்தை நபியவர்கள் சொல்லியிருக்கமாட்டார்கள். 


அல்லாஹ் குர்ஆனில் இப்ராஹிம் நபியின் சம்பவமொன்றை சொல்கிறான்.
இப்ராஹிம் நபி போய் அல்லாஹ்வை மறுக்கும் மன்னனிடத்தில் நீதான் இறைவன் என்று சொல்கிறாய் அப்படியானால் கிழக்கில் உதிக்கும் சூரியனை மேற்கில் உதிக்கச்செய் பார்க்கலாம் என்று சவால் விடத்தை அல்லாஹ் சொல்கிறான்
எனவே practicaly சாத்தியம் இல்லாததை இஸ்லாம் ஒருநாளும் சொல்லாது. 

புஹாரியில் 2719 வரும் ஹதீத்பாதிமது பிந்து கைஸ் என்ற பெண் உமர் ரெலியிடம் போய் நான் விவாகரத்து பெற்று விட்டேன் எனக்கு உணவு, தங்குமிட வசதி என் கணவர் செய்து தரதேவை இல்லை என்று ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்”. என்று உமரிடம் சொன்னதை உமர் (ரலி) ஹதீஸை ஏற்க மறுக்கிறார்கள்.ஏனெனில் அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான். விவாகரத்தாகும் கணவனின் பொறுப்பு இவைகள் என்று ஒரு பெண்ணின் தகவலுக்காக குரானை மறுப்பதா? இவள் தப்பாக கேட்டிருக்கலாம் அல்லது  புரிந்து கொண்டிருக்கலாம். என்று அந்த நேரடியாக சம்பந்தப்பட்ட பெண்ணின் ஹதீஸை ஏற்றக மறுக்கிறார்.

சரியான அறிவிப்பாளர் வரிசையில் உள்ள மற்றுமொரு ஹதீஸில் பின்வருமாறு அமைந்துள்ளது. உமர், இப்னு  உமர் (ரலி) சொல்கிறார்கள் 'ஒரு மையத்துக்காக அவர் உறவினர் அழுதால் மையத்துக்கு வேதனை செய்யப்படும்' என்று ரசூல் (ஸல்) சொன்னார்கள்.
இதை ஆயிஷா (ரலி) மறுக்கிறார். ஏனெனில் அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான் அவர்கள் செய்த தவறுக்கு அவரவர்கள் தான் தண்டிக்கப்படுவார்கள். இவர்கள் பொய் சொல்லவில்லை தப்பாக விளங்கி இருப்பார்கள்.

இன்னொரு சம்பவம் ஆயிஷா (ரலி) சொல்கிறார்கள் குர்ஆனில் சில சூராக்களை ஆடு தின்று காணாமல் போனது. வேறொரு சந்தர்ப்பத்தில் 'ரசூல் (ஸல்) மரணிக்கும்வரை குர்ஆனில் வசனம் இருந்தது தாய் தனது பிள்ளைக்கு 18 மாதம் தான் பாலூட்டவேண்டும் என்று. இதையும் மறுக்கிறோம். அப்படியானால் நபியவர்கள் மரணித்த பின் குரான் வசனங்கள் மாரப்பட்டதா! அல்லாஹ் சொல்கிறான் தாய்மார்கள் 2வருடம் பாலூட்ட வேண்டும் என்பதாக.

குரானை பற்றி அல்லாஹ் சொல்கிறான் "நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்".15:9
ஹதீசுக்கு குரானின் அளவுக்கு உத்தரவாதம் கிடையாது. எனவே குரானா ஹதீஸா என்று வரும் போது குரானைதான் எடுக்கவேண்டும்.

இன்னும் ஒரு ஹதீஸ் அறிப்பாளர் வரிசையில் சரியாக உள்ளது. இருந்தும் இதன் நிலைமையை பாருங்கள் 'ஒரு சஹாபியின் வீட்டுக்கு இளைஜர் ஒருவர் வந்து அவரின் மனைவியிடம் கதைத்து விட்டு போவது அவருக்கு பிடிக்கவில்லை. எனவே இதை ரசூல்(ஸல்) அவர்களிடம் போய் முறையிடுகிறார்.
அதற்கு ரசூல் (ஸல்) சொன்னார்கள் அந்த வாலிபனுக்கு உன் மனைவியின் மார்பகத்தில் பால் அருந்த சொல்லு பிறகு அவர்கள் தாய், மகன் என்ற உறவாவார்கள்" அறிப்பாளர்கள் வரிசை சரியாக இருப்பதால் இதை ஏற்க முடியுமா? இதில் எத்தனை தவறுகள் இருக்கின்றன தெரியுமா? 
இப்படிப்பட்ட அபாசமான விடயத்தை தூதரவர்கள் ஒருபோதும் சொல்லமாட்டார்கள்.
விபச்சாரம் புரியும் நோக்குள்ள ஒவ்வருவரும் மாட்டிக்கொண்டதும் சொல்வார்கள் நான் பால் குடிக்கவந்தேன் எனக்கு தாய் மாதிரி என்று. மேலும் இது இஸ்லாமிய அடிப்படை கொள்கைக்கும் எதிராக உள்ளது. நபியவர்கள் பால் கொடுக்கக்கூடிய வயதை வேறாக விளக்கியுள்ளார்கள்.

ஹதீஸ் என்று  வந்து விட்டது எதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று வாதிடுபவர்கள் தங்கள் மனைவியின் மார்பகத்தில் இன்னொருவர் பால் அருந்துவதை அனுமதிப்பார்களா? 

எனவே மனிதர் என்ற வகையில் யாரவது தவறாக கேட்டிருப்பார்கள் அல்லது தவறாக விளங்கியிருப்பார்கள் என்று தான் எடுத்துக்கொள்ளவேண்டும். 
ஹதீஸ் கலை பற்றி அறிவற்றவர்கள் புஹாரியில், முஸ்லிமில் வந்துவிட்டது. ஹதீஸை இவர்கள் எப்படி மறுக்கிறார்கள் என்று மார்க்க அடிப்படை விளங்காமல் வாதிடுகின்றனர். ஏன் இக்கேள்வியை மேல்குறிப்பிட்ட சஹாபாக்களிடமும் இவர்கள் பின்பற்றும் பின்வரும் இமாம்கள் ஹதீஸ்களை மறுத்ததையும் சொல்வதில்லை. இதை இமாம்கள் குரானுக்கு முரண்படுதல் அல்லது கருத்து தவறானவைகளை எடுக்ககூடாது என்று அவர்களின் புத்தகங்களில் குறிப்பிட்டுள்ளார்கள்.இமாம் ஜுர்ஜான் (தஹ்ரிபாத் vol-1 page 113) இமார் சுயூதி (தத்ரீவுராவி vol -1page  226) இமாம் இன்னுல் கையூம் (அல் மனாத் vol -1 page 83)இமாம் ஷாபி (அல் மஹ்பூத் vol-4 page 438)இமாம் குருதுபி (அல்குர்துபி)
இமாம் இஸ்மாயில் ( இப்ராஹிம் நபியின் தந்தையை நரகில் போடும் ஹதீஸை Muslim-3350 மறுக்கிறார் இவர் புஹாரி இமாமை போல் சிறந்த இமாமாவார்). இமாம் இன்னு தைமியா உலகத்தை அல்லாஹ் 7 படைத்தான் என்ற முஸ்லிமில் உள்ள ஹதீஸை குரானின் கருத்துக்கு எதிர் என்பதற்காக மறுக்கிறார்.
ஏனெனில் அல்லாஹ் குர்ஆனில் உலகத்தை 6 நாட்களில் படைத்தான் என்று சொல்கிறான்.


இதைத்தான் மேல் சொல்லப்பட்ட ஹதீஸ் முளுமையவதர்கான விதிகளும் சொல்கிறது. எனவே ஹதீஸ் பற்றிய விளக்கம் அறிவு, இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளை விளங்காதவர்கள் எல்லாவருக்கும்குறைபிடித்துக்கொண்டுதான் இருப்பார்கள்.

எனவே ரசூல் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது என்ற ஹதீஸ் ஏற்புடையது இல்லை. ஒரு பேச்சுக்கு சூனியம் செய்யப்பட்டது என்று சொன்னால் ரசூல் (ஸல்) அவர்கள் 6 மாதம் பாதிக்கப்பட்டார்கள் என்று வருகிறது. அந்த 6மாதமாக இறக்கப்பட்ட வஹியின் நிலை? ரசூல்(ஸல் அவர்கள் சாதாரண நிலையில் இருக்கும் போதே யூதர்கள் இல்லாத பொல்லாத குறைகளை சொல்லிக்கொண்டும்  நிராகரித்துக்கொண்டும் இருந்தனர்.

எனவே சூனியத்தால் பாதிக்கப்பட்டது உண்மையாக இருந்திருந்தால், குரானையும் இஸ்லாத்தையும் மறுப்பதற்கு இதுவே யூதர்களுக்கு மிகப்பெரிய விடயமாக இருந்திருக்கும். மேலும் சூனியத்தால் இவ்வளவு நாற்கள் பாதித்திருந்தால் பல சஹாபாக்கள் அறிந்திருப்பார்கள் பல சஹாபாக்கள் பல பல செய்திகளை சொல்லியிருப்பார்கள். இப்படி ஒரு அறிவிப்பும் கிடையாது.

அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான் 17:47 லும் 25:8 இலும் "அணியாயக்கார்கள் சொல்கிறார்கள் சூனியம் செய்யப்பட்ட தூதரையே பின்பற்றுகிறீர்கள்" எனவே குரான் மூலம் அல்லாஹ் மறுக்கிறான் நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்படவில்லை என்று . மேலும் அப்படி சொல்பவர்களை அல்லாஹ் சொல்லும் வார்த்தை அநியாயக்காரர்கள்.

குரானில் சொல்லப்பட்ட இடங்களில் எல்லாம் சூநியத்தைப்பற்றி அல்லாஹ் சொல்லும்போது அது மாயை, கண்களுக்குத்தான் அப்படி தோற்றமளிக்கமுடியும் என்று படைத்தவன் garuantee தருகிறான்.

மேலும் மூஸாவிடம் எதிரிகள் வித்தையை போட்டபோது அதற்கு எதிராக அல்லாஹ்வின் கட்டளைப்படி  மூஸா போட்ட கைத்தடி உண்மையான பாம்பாக மாரியதைக்கண்டு இஸ்லாத்தை ஏற்றனர்.

 

7:116 வசனத்தில் "சூனியக்காரர்கள் மக்களின் கண்களை ஏமாற்றினார்கள்" என்று அல்லாஹ் கூறுகிறான். 

 

20:66 வசனத்தில் "பாம்பைப் போல் கற்பனையான தோற்றத்தை ஏற்படுத்தினார்கள்" என்று அல்லாஹ் கூறுகிறான். "கயிறுகளைப் பாம்புகளாக அவர்கள் மாற்றினார்கள்" என்று அல்லாஹ் கூறவில்லை. 

அல்குரான் 2:102 வசனத்தில் கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்துவதை அவர்கள் கற்றுக் கொண்டார்கள் என்று இவ்வசனம் கூறுவதால் சூனியத்தால் கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்த முடியும் என்று மேலோட்டமாகப் பார்க்கும் போது தோன்றினாலும் சிந்திக்கும் போது அது தவறு என்பது தெரிய வரும். 

 

இவ்வசனத்தில் சூனியத்தின் மூலம் கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்த முடியும் என்று சொல்லப்படவில்லை. கணவன் மனைவிக்கு இடையே பிரிவினையை எது ஏற்படுத்துமோ அதையும் அவர்கள் கற்றுக் கொண்டார்கள் என்று தான் இதில் கூறப்பட்டுள்ளது. சூனியத்தை அவர்கள் கற்றுக் கொண்டதுடன் கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்துவது எப்படி என்பதையும் மேலதிகமாகக் கற்றுக் கொண்டனர் என்று தான் இவ்வசனம் கூறுகிறது. 

 

அல்லாஹ் நாடினால் தவிர இதன் மூலம் யாருக்கும் கேடு விளைவிக்க முடியாது இவ்வசனத்தில் கூறப்படுவதால் அல்லாஹ் நாடினால் சூனியத்தின் மூலம் கேடு ஏற்படுத்த முடியும் என்று தெரிகிறது என்றும் சிலர் வாதிடுகின்றனர். 

 

இதுவும் தவறான விளக்கமாகும். இச்சொல்லுக்கு முன் இரண்டு செய்திகள் உள்ளன. சூனியத்தைக் கற்றுக் கொண்டார்கள் என்பது ஒரு செய்தி. கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்துவது எப்படி என்பதையும் கற்றுக் கொண்டார்கள் என்பது இன்னொரு செய்தி. இவ்விரு செய்திகளைக் கூறிவிட்டுத் தான் இதன் மூலம் அல்லாஹ் நாடினால் தவிர யாருக்கும் தீங்கு இழைக்க முடியாது என்று அல்லாஹ் கூறுகிறான். இதன் மூலம் என்று ஒருமையாக சொல்லப்பட்டுள்ளதால் அது ஒன்றைத் தான் குறிக்கும். அவ்விரண்டின் மூலம் என்று இருமையாக சொல்லப்பட்டால் தான் இரண்டையும் குறிக்கும். 

 

அதன் மூலம் என்பது இரண்டில் ஒன்றைக் குறிக்கும் என்றால் அந்த ஒன்று எதுவாக இருக்க முடியும்? இச்சொல்லுக்கு அருகில் எது உள்ளதோ அதுவாகத் தான் இருக்க முடியும். தொலைவில் உள்ளதாக இருக்க முடியாது. 

 

"நாங்கள் படிப்பினையாக இருக்கிறோம். எனவே (இதைக் கற்று இறைவனை) மறுத்து விடாதே!" என்று கூறாமல் அவ்விருவரும் யாருக்கும் கற்றுக் கொடுப்பதில்லை. கணவனுக்கும், மனைவிக்குமிடையில் பிரிவினை ஏற்படுத்துவதையும் அவ்விருவரிடமிருந்தும் அவர்கள் கற்றுக் கொண்டனர். அல்லாஹ்வின் விருப்பமின்றி அதன் மூலம் யாருக்கும் எந்தத் தீங்கும் அவர்களால் செய்ய முடியாது. 

 

இதில் கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்தும் கலையைப் பற்றி சொல்லி விட்டு இதன் மூலம் என்று சொல்லப்பட்டுள்ளது. எனவே கணவன் மனைவிக்கு இடையே பிரிவினை ஏற்படுத்துவது கூட நூறு சதவிகிதம் அல்ல. அல்லாஹ் நாடும் சில நேரங்களில் இப்படி நடந்து விடும். அல்லாஹ் நாடாத சில நேரங்களில் அது நடக்காமலும் போய்விடும் என்பதைத்தான் இவ்வசனம் சொல்கிறது. 

 

அல்லாஹ் நாடினால்தான் எதுவும் நடக்கும் இருந்தும் 

இங்கு சிஹ்ர் விடயத்தில் அல்லாஹ் நாடினால் என்பதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால் உதாரணத்துக்கு நாளை காலை உலகம் அழியும் என்று அனைவரும் சொல்கிறார்கள் இதையும் நாம் சொல்வோம் அல்லாஹ் நாடினால் நடக்கும் அதற்காக அல்லாஹ் அப்படி நாடுவானா? இதைத்தான் அல்லாஹ் குர்ஆனில் இப்ராஹிம் நபி சென்று சிலை வணகிகளிடம் சொன்னதை சொல்கிறான்.  இப்ராஹிம் நபி அவரது சமூதாயத்தைப்பார்த்து சொன்னார்கள்.

 "அல்லாஹ்எனக்குநேர்வழிகாட்டியநிலையில்அவனைப்பற்றிஎன்னிடம்விவாதிக்கிறீர்களா? நீங்கள்இணைகற்பித்தவற்றுக்குஅஞ்சமாட்டேன். என்இறைவன்எதையேனும்நாடினாலன்றி"

6:80

அதாவது சூனியத்தினால் ஒரு பாதிப்பும் ஏற்படுத்த முடியாது. அதே நேரத்தில் கணவன் மனைவிக்கு இடையே எப்படி பிரிவினை ஏற்படுத்த முடியும் என்று கற்றார்களோ அதன் மூலம் பிரிவினை ஏற்படுத்த முடியும். ஆனால் அது கூட அல்லாஹ் நாடினால் தான் நடக்கும் இது தான் இவ்வசனத்தில் இருந்து பெறப்படும் கருத்தாகும்.

 

20:69 வசனத்தில் "சூனியம் என்பது ஒரு சூழ்ச்சி, தந்திரம்" என்று அல்லாஹ் கூறுகிறான். 

 

மேஜிக்கில் ஒருவகை தான் ஸிஹ்ர் எனும் சூனியமே தவிர வேறில்லை. 

கையை முடக்குவேன், காலை முடக்குவேன் என்றும், இல்லாததை உண்டாக்குவேன் என்று புளுகுவோர், தங்கள் மந்திர சக்தியினால் பெரும் வசதி படைத்தவர்களாக ஆக முடியவில்லை. மக்களை ஏமாற்றிப் பணம் பறித்து வேண்டுமானால் பணக்காரர்களாக சிலர் ஆகியிருக்க முடியும். 

 

இதிலிருந்தே சூனியம் என்பது வெறும் பித்தலாட்டம் என அறிய முடியும். 

 

 

News flash

 •  ஜனாஷாவிட்கு செய்ய வேண்டிய கடமைகள்

   

  =========================

  அஸ்ஸலாமு அழைக்கும் 

  ஆண்களுக்கான மார்க்க வகுப்பு 

  திங்கள் கிழமை மாலை 7:30 மணி முதல் 9:30 மணி வரை 

  Langley Green Community Centre ல்

  நடைபெறும் உங்கள் அனைவரையும் 

  அன்புடன் அழைக்கின்றோம்  

Events

Prayer Timetable

 If you cant View this
Download Adobe reader