மாற்று மத கலாச்சாரம்

Print

காதலை வெளிப்படுத்த  ஒரு தினம்  தேவைதானா?

கடந்த சில ஆண்டுகளாக உலக நாடுகளில் வருடா வருடம் சில தினங்கலை விழிப்புணர்வு தினங்களாக பிரகடனப்படுத்தி இருப்பது வரவேக்கத்தக்கது. உதாரணமாக உலக புற்று நோய் தினம், எயிட்ஸ் தினம், குழந்தைகள் தினம், மற்றும் பெற்றோர் தினம் இவைகள் மூலம் சமூகத்துக்கு நன்மைகள் இருக்கின்றன, வருடாவருடம் ஒரு தினத்தில் மேட்குரிப்பிட்டவைகளை எச்சரிக்கைக்காக எடுத்துச்சொல்லும் போது சில நோய்களிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளவும் பெரிதும்         உதவுவதுகிறது.னால் வெலன்டைன் டே (காதலர் தினம்) ன்று வருடாவருடமபெப்ரவரி 14ஐ தீர்மானித்து            கொண்டாடிவருவது             தவறானதாகும்.
வெலன்டைன் என்பது இத்தாலியைச் சேர்ந்த கிறிஸ்தவ மத பிரச்சாரகர் ஒருவரின் பெயராகும். மேற்க்கு நாடுகள் இதை வியாபார நோக்கத்துக்காக மாற்றி விட்டனர்.

சமூகத்திற்கு நன்மைபயிக்காத, மார்க்கத்துக்கு முரனானை செயல்கள் நிகழக்கூடிய தினமாக     இது            இருந்து           வருகின்றது. 
சில வர்த்தகர்களின் சுயலாபத்திற்காக     உருவாக்கப்பட்ட இந்த தினத்தில் ஆண்களும், பெண்களும் கற்பை இழந்தவர்களாக ஆகின்றனர், மதுபானம் அருந்துதல், சினிமா தியேட்டர்களுக்கு செல்லுதல் மேலும் மார்க்கத்துக்கு முரானான, சமூகத்துக்கும்  தீங்கிளைப்பவைகை செய்பவர்களாக இருக்கின்றனர்.

சில காதல்கள் வெற்றி அளித்தாலும் பெரும்பாலான காதல்கள் திருமணத்தில் முடிவதில்லை. திருமணத்தில் முடிந்த பெரும்பாலான காதல் பிரச்சனையில் தான் முடிந்துள்ளது. காதலிக்கும் போது நம்முடைய நற்குணங்கள், மட்டுமே வெளிப்படும், காதலுக்காக எதையும் செய்ய துணிவார்கள், ஆனால் திருமணத்திற்க்கு பிறகு நிஜவாழ்க்கைக்கு வந்த பிறகு குடும்பத்தின் கஷ்டம்தான் கண் முன்னே இருக்குமே தவிர கற்பனை காதல் அல்ல,  ஆசை வார்தைகளை மட்டுமே கண்ட காதல் வாழ்க்கை முடிந்து ஒருவரை ஒருவர் திட்டிக்கொள்ளும் வார்த்தை         தான்    மிஞ்சி இருக்கும்.
காதலித்து திருமணம் செய்த எத்தனயோ தம்பதியினர் நாங்கள் பெற்றோரின் முன்னிலையில்  திருமணம் செய்திருந்தால் இதை விட மிகச்சிறந்த கணவன் அல்லது இதை விட மிகச்சிறந்த மனைவி கிடைத்து இருபார்கள் என்று ஒவ்வொரு நாளும் ஏங்கும் எத்தனையோ கணவன், மனைவி இருக்கிறார்கள். 

பெற்றோரையும் உறவுகளையும் முறித்துக்கொண்டு காதலி, காதலனோடு வீட்டை விட்டு ஓடி வருபவர்களுக்கு வாழ்க்கையில் கஷ்டங்கள் நிகழும் போதும் நல்லது, கேட்டது    நடக்கும்         போதும்            உதவி செய்வதற்கோ அல்லது குறைந்தது ஆறுதல் சொல்வதற்கோ ஒருவரும் இல்லாத பரிதாபகரமான நிலைமையும் ஏற்படுகிறது.

உறவினர்களை முரித்துக்கொல்வதை இஸ்லாம் வன்மையாக கண்டித்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "உறவு (இறையருளின்) ஒரு கிளையாகும். ஆகவே, "அதனுடன் யார் ஒட்டி வாழ்கின்றாரோ அவருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை யார் முறித்துக் கொள்கிறாரோ அவரை நானும் முறித்துக் கொள்வேன்'' (என்று உறவைப் படைத்த போது இறைவன் சொன்னான்).         (புகாரி-5989)

 

 

இன்னுமொரு சந்தர்ப்பத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"தமது வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தமது உறவைப் பேணி வாழட்டும்".  (புகாரி-5985)

மேலும் எத்தனையோ பெண்கள் எத்தனையோ ஆண்கள் இந்த காதலர் தினத்திலாவது நமக்கு ஜோடி கிடைக்குமா என்று ஏங்குகின்றனர், நமது வட்டத்தில் நமக்கு மட்டும் காதலன், காதலி இல்லையே            என்றும்           ஏங்குகின்றனர். 

சில பெண்களின் அவசர புத்தியினாலும், சீக்கிரம் உணர்சிவசப்படக்கூடியவர்களாக இருப்பதாலும் ஆண்களின் வலையில் இலகுவாக சிக்குகின்றனர். 20வருடம் பெற்று வளர்த்த பெற்றோரை 20நிமிடத்தில் தூக்கி எறிந்துவிட்டு செல்கின்றனர். இவ்வாறு சென்ற பெண்களில் அதிகமானவர்கள் காதலனால் சீரழிக்கப்பட்டு நடு வீதியில் விடப்படுகின்றனர். பிறகு வாழவும் வழியில்லாமல், வீட்டிற்கும் போகவும் முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்நிலை மாற்று மதங்களில் அதிகமாக நிகலக்கூடியதை நாம் காணுகிறோம்.

பொய்யான வாக்குறுதிகளை தந்து உங்களுடன் சேர்ந்து எல்லா தவறுகளும் செய்துவிட்டு ஆண்களால் சமுதாயத்தில் நன்றாக வாழமுடிகின்றது, ஆனால் பெண்களாகிய உங்கள் நிலையை எண்ணி பாருங்கள்.

ஆண்களாயினும் காதலிக்கும் நேரத்தை தங்களது படிப்புக்காக செலவழித்தால் எதிகாலத்தில் நல்ல வேலைக்குச்செல்லலாம். நம்மை கஷ்ட்டப்பட்டு படிக்க வைக்கும் பெற்றோர்களை காப்பாற்றலாம், தன் பிள்ளை தன்னை வயதான காலத்தில் காப்பாற்றுவான் என கணவுகளுடன் உங்களை படிக்கவைக்கும் பெற்றோர்களுக்கு செய்யும் துரோகம் தான் காதல் என்ற பெயரில் உங்கள் நேரத்தையும்            வாழ்கையையும் வீணடிப்பதுடன். உங்களுடைய பொருளாதாரத்தை வீணாக்கும் கருவியாகத்தான் காதலிகள் இருக்கின்றனர்.

காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கங்கள் மற்றும் அசிங்கங்களை இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற விழிப்புணர்வு இல்லாததே காரணம் . காதலும் ஒரு விபச்சாரம் தான் என்ற அறிவு நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் இருந்திருந்தால் இந்த            தீமைகளில்    இருந்து           விலகி இருக்க           முடியும்.
நபி      (ஸல்)  அவர்கள்         கூறினார்கள்
“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது(புகாரி-6243)

ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும்இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.

நாம் வாழக்கூடிய UKயிலும் கூட மிக இல வயதான முஸ்லிம் சிறுவர், சிறுமியர்கல்  காதல் வலைகளில் முஸ்லிம் அல்லாதவர்களுடன் சிக்கியிருப்பதுடன், போதை பொருட்களுக்கும் ஆளாகி இருப்பது            மிகவும் வருந்தத்தக்கது.
அவர்களின் இந்நிலைக்கு பெரும்பாலான  காரணம் பெற்றோர்கள் தான். தங்கள் பிள்ளைகள் மீது       போதியளவு கவனம் செலுத்தாமை, பெற்றோரும் சரியான மார்க்கத்தை முழுமையாக கடைப்பிடிக்காமை, அத்தோடு தனது பிள்ளைகளையும் மார்க்க சூழலில் வளர்க்காமை, மேலும் பிள்ளைகள் கேட்கிறார்கள் என்பதற்காக மொபைல் போன், டப்லெட், லேப்டாப் போன்றவைகளை கவனிப்பில்லாமல் பயன்படுத்தவிடுவது. இவைகல் தான்  பிள்ளைகளின் தவறான 
பாதைக்கு இட்டுச்செல்பவை. 

"நீங்கள் ஒவ்வொருவர்களும் பொருப்புதாரிகல் நீங்கள் உங்கள் பிரஜைகளைப்பற்றி நாளை மறுமையில்            அல்லாஹ்விடத்தில்            விசாரிக்கப்படுவீர்கள்". என்று ரசூல் (ஸல்)     அவர்கள்     கூறினார்கள்

எனவே எனக்கு பொருப்புக்கிடையாது என்று யாரும் சொல்லமுடியாது. உங்கள் ஒவ்வொருவர்களுக்கும் பொறுப்பு உண்டு. ஒரு ஆசிரியருக்கு மாணவர்கள் பொறுப்பு, ஒரு தந்தைக்கு தனது பிள்ளைகள் பொறுப்பு, ஒரு தாயிக்கு வீட்டிளிருக்கக்கூடிய மற்றவர்கள் பொறுப்பு, இவ்வாறு ஒவ்வொருவர்களும் தங்களின் பொறுப்புக்களை சரிவரச்செய்யாவிட்டால் மறுமையில் மாட்டிக்கொள்வோம்.
மேலும் "நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். "அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள் (அல்குரான் - 9:71)          

இந்தகைய சமூகத்தீங்கினை தடுக்க நாங்கள் என்னென்ன முயற்சி எடுத்திருக்கிறோம் என்பதை நாங்களே எண்ணிப்பார்க்கவேண்டும்.

 

எனவே இப்படி உயிர் கொல்லியமாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழுத்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருவது மிகவும் தவறானதே. இதற்கெல்லாம் காரணம் எந்த குடும்பம் சீரழிந்தாலும் பரவாயில்லை எங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று மீடியாக்கள் கொஞ்சம் கூட சமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்இவைகளிலிருந்து நம் பிள்ளைகளையும் நமது சமூகத்தையும் பாது காத்துக்கொள்வோம் 

"எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித்தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! (அல்குரான் - 2:128)

 

News flash

 •  ஜனாஷாவிட்கு செய்ய வேண்டிய கடமைகள்

   

  =========================

  அஸ்ஸலாமு அழைக்கும் 

  ஆண்களுக்கான மார்க்க வகுப்பு 

  திங்கள் கிழமை மாலை 7:30 மணி முதல் 9:30 மணி வரை 

  Langley Green Community Centre ல்

  நடைபெறும் உங்கள் அனைவரையும் 

  அன்புடன் அழைக்கின்றோம்  

Events

Prayer Timetable

 If you cant View this
Download Adobe reader