சர்வதேச பிறையை ஏற்றுக்கொள்ளலாமா?

Print

பிறை பற்றிய தவறான வாதங்களுக்கான பதில்கள்

இஸ்லாத்தில் எந்த ஒரு விடயத்தை செய்வதானாலும் அது குரான், ஹதீஸ் அடிப்படையில் அமைத்திருக்க வேண்டும். இல்லாவிடில் அச்செயல் மார்க்க அங்கீகாரம் பெறாது. அதற்கு எவ்வித நன்மையையும் அல்லாஹ்விடத்தில் இல்லை, மாறாக தண்டனையும் உண்டுஒரு பிரதேசத்தில் காணப்பட்ட பிறை அப்பிரதேசத்தை மட்டும் தான் கட்டுப்படுத்தும் என்று ஒரு சாராரும், இல்லை ஒரு பிரதேசத்தில் காணப்பட்ட பிறை அது முழு உலகையும் கட்டுப்படுத்தும் என்று சாராரும் வாதிடுகின்றனர்.
இதில் எதை  குரான், ஹதீஸ் சொல்கிறது என்று ஆதாரங்களின் அடிப்படையில் பார்ப்போம். 

"உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்"

(அல்குரான்-2:185)

 பிறை சம்பந்தமான முக்கியமான சான்றாக இந்த வசனம் அமைந்து உள்ளது. 

 

திருக்குர்ஆன் ஏகஇறைவனின் வார்த்தை என்பதை நாம் அறிவோம். மனித வார்த்தைகளில் காணப்படும் தவறுகள் இறைவனின் வார்த்தைகளில் இருக்காது, இருக்கவும் முடியாது. தேவையில்லாத ஒரு சொல் கூட அதில் இடம் பெறாது. இதை மனதில் பதியவைத்துகொண்டு இவ்வசனத்துக்கான விளக்கத்தை பார்ப்போம்.

 

உங்களில் யார் ரமளான் மாதத்தை அடைகிறாரோ அவர் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது கடமை என்ற சொற்றொடரில் உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்ற வாசகம் இல்லாமலே ரமளானில் நோன்பு நோற்பது கடமை என்ற கருத்து கிடைத்து விடும் 

 

எனவே இதன் மூலன் அல்லாஹ் சொல்கிறான், ஒரே நேரத்தில் எல்லோரும் ரமலானை அடைய மாட்டார்கள், 

 

குர்பானிப் பிராணியைப் பெற்றுக் கொள்பவர்களும் குர்பானிப் பிராணியைப் பெற்றுக் கொள்ளாதவர்களும் இருக்கும் போது தான் யார் குர்பானிப் பிராணியைப் பெற்றுக் கொள்ளவில்லையோ (திருக்குர்ஆன் 2.196) என்று கூற முடியும். 

 

உலகிலுள்ள அனைவரும் இரே நேரத்தில் ரமலானை அடையமாட்டார்கள் என்பதற்கு இந்த ஒரு வசனமே போதுமான சான்றாக அமைகின்றது.

 

இதற்கு  மாற்று கருத்திலுள்ளவர்களின் வாதம்:-

 

ஒரு  பகுதியினர் ரமலானை அடைவார்கள் அதன் பின் அவர்களின் தகவளைக்கேட்டு மற்ற பிரதேசங்களில் உள்ளவர்கள் அடைந்து கொள்வார்கள். 

இது ஏற்புடைய வாதம் கிடையாது.  தனது கருத்தை நிலை நாட்டச்சொள்ளும் சாட்டு போக்கே ஆகும்.

 

 

பின்வரும் ஹதீஸும் ஒரு பகுதியில் காணப்படும் பிறை அப்பகுதியை மாத்திரம் தான் கட்டுப்படுத்தும் என்பதை தெளிவாகச்சொல்கிறது.

 

"உம்முல் ஃபழ்ல் (ரலி) அவர்கள் சிரியாவிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் என்னை அனுப்பி வைத்தனர். நான் சிரியாவுக்குச் சென்று அவரது வேலையை முடித்தேன். நான் சிரியாவில் இருக்கும் போது ரமளானின் தலைப்பிறை தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு நான் பிறையைப் பார்த்தேன். பின்னர் அம்மாதத்தின் கடைசியில் மதீனாவுக்கு வந்தேன். இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம் (பயணம் குறித்து) விசாரித்தார்கள். பின்னர் பிறையைப் பற்றி பேச்சை எடுத்தார்கள். நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள்?'' என்று (என்னிடம்) கேட்டார்கள். நாங்கள் வெள்ளிக்கிழமை இரவில் பிறையைப் பார்த்தோம்'' என்று கூறினேன். நீயே பிறையைப் பார்த்தாயா?'' என்று கேட்டார்கள். ஆம், (நான் மட்டுமல்ல) மக்களும் பார்த்தார்கள். நோன்பு பிடித்தார்கள். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு பிடித்தார்கள்'' என்று கூறினேன். அதற்கவர்கள் ஆனால் நாங்கள் சனிக்கிழமை இரவில் தான் பிறையைப் பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்களை முழுமையாக்கும் வரை நோன்பு பிடித்துக் கொண்டிருப்போம்'' என்றார்கள். முஆவியா (ரலி) அவர்கள் பிறை பார்த்ததும் அவர்கள் நோன்பு பிடித்ததும் உங்களுக்குப் போதாதா?'' என்று கேட்டேன். அதற்கவர்கள்போதாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித் தான் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்'' என்று விடையளித்தார்கள்.

(முஸ்லிம்-1819)

 

இந்த ஹதீஸுக்கு எதிர்கருத்தில் உள்ளவர்களின் விளக்கம்:-

இப்னு அப்பாஸ் அவர்கள் அபூ குறைபின் சாட்சியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை ஏனெனின் இப்னு அப்பாஸுக்கு பிறை பார்த்ததாக  இருவர் சாட்சி சொன்னால் ஏற்றுக்கொள்ளுங்கள் என்ற ரசூல் (ஸல்) அவர்களின் ஹதீஸ் தெரிந்திருக்க வில்லை என்றும் ரசூல் (ஸல்) அவர்கள் சொன்ன மேலும் சில விடயங்கள் தெரியாமல் இருந்திருக்கிறாரே! என்றும் சொல்லி பின்வரும் ஹதீஸ்கலை எடுத்துக்காட்டுகிறார்கள்.

உதாரணமாக வாடகை திருமணம் ரசூல் (ஸல்) அவர்கள் முதலில் அனுமதித்து விட்டு பின்பு தடை செய்தார்கள். அந்த தடை செய்த விடயம் இப்னு அப்பாஸுக்கு தெரிந்திருக்கவில்லை. அதேபோல் இஃராம் கட்டிய நிலையில் பெண்களை திருமணம் முடிக்க கூடாது என்று நபியவர்கள் சொல்லியிருந்தார்கள். இந்த ஹதீஸும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.

 

எனவே மாற்றுக்கருத்தில் உள்ளவர்களின் வாதம் இதே போல் இப்னு அப்பாஸுக்கு ரசூல் (ஸல்) சொல்லிய இருவரின் சாட்சியத்தை ஏற்க வேண்டும் என்ற ஹதீஸும் தெரிந்திருக்கவில்லை என்ற கருத்தை முன்வைத்து இந்த ஹதீஸின் விளக்கத்தை மறுக்கிறார்கள்.

 

இந்த வாதம் ஏற்புடையதல்ல ஏனெனில் இப்னு அப்பாஸுக்கு நபியவர்கள் சொல்லி தெரியாமல் இருந்த ஹதீஸ்களை அதே காலத்தில் வாழ்ந்த சஹாபாக்கள், ரசூல் (ஸல்) அவர்களால்  சொல்லிவிட்டு பின் மாற்றப்பட்ட ஹதீஸ்களை சுட்டிக்காட்டி  அதில் இப்னு அப்பாஸுக்கு 2-3 விடயங்களில்   மாற்றப்பட்ட மார்க்கச்சட்டம்

தெரிந்திருக்கவில்லை என்று சொல்லிவிட்டு போனார்கள்.

 

மாற்றுக்கருத்தில் உள்ளவர்களிடம் உங்களது வாதத்தை நிலை நாட்ட இவ்வாறான ஒரு ஆதாரத்தை தாருங்கள் என்று கேட்டதற்கு அதற்கு ஆதாரம் ஏதும் இல்லாமல் ஏதாவது ஒரு பதிலை சொல்ல வேண்டுமே என்ற நிர்ப்பந்தத்தில் அறுநூறுகளுக்கு  முன் வாழ்ந்த இப்னு தைமியா சொல்லியுள்ளதாக சொல்கிறார்கள். இது அர்த்தமற்ற ஆதாரமாகும்,  அவர்களால்  சமகாலத்தில் வாழ்ந்த சஹாபாக்கள் சொன்னதாக எந்த ஒரு ஆதாரத்தையும்

  தரமுடியவில்லை.

 

வேறு பகுதியில் காணப்பட்ட பிறையை நபியவர்கள் ஏற்கவில்லை என்பதை பின்வரும் ஹதீஸ் உறுதிப்படுத்துகின்றது.

 

மேக மூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். பகலின் கடைசி நேரத்தில் ஒரு வாகனக் கூட்டத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விட்டுவிடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்”.

(அஹ்மத்- 19670)


இந்த வாகனக்கூட்டம் பக்கத்துக்கு ஊரிலிருந்துதான்  வந்திருக்க முடியும்.

மிகத் தொலைவிலிருந்து வந்திருக்க முடியாது ஏனெனில் நேற்று பிறை பார்த்துவிட்டு  இன்று காலை பயணத்தை ஒட்டகத்தில் தொடங்கியிருந்தாலும் அதே நாள் மாலை வந்து சேர்ந்துள்ளனர்.  

பகலின் இருதிப்பகுதியான மஃரிபுக்கு சிறிது நேரத்துக்கு முன் வந்துள்ளனர் என்பதும் வந்தவர்களை மாத்திரம் சிறிது நேரம்தான்  நோன்பு திறப்பதற்கு இருந்தும் வந்தவர்களுக்கு நோன்பை விடச்சொன்னதுடன் அவர்களை காலை பெருநாள் தொழவும் நபியவர்கள் சொன்னார்கள்.

 

மேலுள்ள ஹதீஸின் அடிப்படையில் புரியக்கூடிய தெளிவான விடயங்களில் ஒன்று தூர இருந்து வந்த பிறைத்தகவலை ஏற்கக்கூடாது. நபியவர்கள் ஏற்கவில்லை. இந்த ஹதீஸில் வரக்கூடிய தூரத்தை அண்ணளவாக  எங்களுக்கு விளங்கிக்கொள்ளலாம். முந்தின தினம் பிறை பார்த்து விட்டு ரசூல் (ஸல்) இருக்கும் இடத்துக்கு மாலை நேரம் வந்தார்கள் என்றால் ஒரு நாளைக்கு குறைவான நேரத்தில் 60-70 கிலோமீட்டர் தூரம் தான் ஒட்டகத்தில் அதிகபட்சம் பிரயாணித்து வந்திருக்கலாம். அந்த பிறை தகவலையே நபியவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இவ்வாறிருக்க சிலர் பல்லாயிரம் மையில்கள் தூரத்திலுள்ள சவூதி கண்ட பிறையை அடிப்படையாக வைத்து தமது நோன்பு, பெருநாட்களை தீர்மானிக்கின்றனர். இதட்கு மார்க்கத்தில் கடுகளவும் ஆதாரம் இல்லாத விடயமாகும். இதன் மூலம் குரானும், ஹதீஸும் சொல்லக்கூடிய பல சட்டங்களை, கட்டளைகளை இவர்கள் மீறுகின்றனர்.
நோன்பு மற்றும் பெருநாட்கள் இஸ்லாத்தில் மிக முக்கியமான தருணங்களாகும். இதை இஸ்லாம் சொல்லியபடி செயட்படுத்தாவிட்டால் அதட்கான கூலியை நாம் இழந்து விடுவோம்.
 
 
மேலும் தாம் வசிக்கும் நாட்டை விட்டு வெளிநாட்டு பிறைக்கு செல்லும் போது உள்ள மிகப்பெரிய மார்க்க முரண் என்னவென்றால் பிறைத்தகவல் கிடைத்ததும் நோன்பை விட வேண்டும் என்பதை உள்நாட்டு, வெளிநாட்டு பிறைகளை பின்பற்றக்கூடிய அனைவரும் ஏற்றுக்கொண்ட விடயம் அதில் அவர்கள் உண்மையாளராக இருந்தால் தாம் வாழும் நாட்டுக்கு சவூதி பிறை தகவல் வந்ததும் நோன்பை திறக்க வேண்டும். எவ்வாறு அவர்கள் செய்வதும் இல்லை. இதற்காண பதிலும் இல்லை.
பொதுவாகவே ஒரு நாட்டுக்குள் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் மஹ்ரிபுடைய நேர வித்தியாசம் இருந்தால் பிரச்சினையாக இருக்காது. ஏனெனில் பிறை தென்படக்கூடிய நேரம் மக்ரிப் அதானுக்கு பின் வரக்கூடிய 15 நிமிடத்துக்கும் 30 நிமிடத்துக்கும் இடைப்பட்ட தாக்கும். எனவே 30 -35 நிமிடம் வரை உள்ள நேர வேறுபாடுள்ளவர்களுக்கு பிரதகவல் கிடைத்ததும் நோன்பை திறக்க வேண்டும் என்ற சட்டம் பொருந்திப்போகிறது.
 
 
மேலும் சில வெளிநாடுகளில் குடிபெயர்ந்தவர்களின் வாதம் நாம் உயிரில் இருக்கும் போது உள்ளூர் பிறை தான் என்பதாகும். நீங்கள் உங்கள் சொந்த ஊரில் இருந்தால் தான் உள்ளூர் பிறையை பின்பற்றவேண்டும் என்று இஸ்லாம் சொல்லவில்லை. மாறாக நாம் எந்தெந்த நாட்டில் இருந்தாலும் அந்தந்த நாட்டு பிறையைத்தான் பின்பற்ற வேண்டும் என்று சொல்கிறது.
 
 

மாற்றுக்கருத்தில் உள்ளவர்களின் வாதம்:-

 

இந்த ஹதீஸில் ரசூல் (ஸல்) அவர்கள் வெளியில் இருந்து வந்த  தகவலை ஏற்றிருக்கிறார்கள். எனவே உலகில் யாராவது பிறை கண்டதாக சொன்னால் அதை ஏற்க வேண்டும் என்றும் வாதிடுகின்றனர்.

அதற்கு அவர்கள் மேலுள்ள ஹதீஸில் இருந்து பின்வரும் ஆதாரங்களை காட்டுகின்றனர்.

 

ஆதாரம்-1 

ஷுஃபாவிடம் இருந்து சுஃபியான் அறிவிக்கிறார் ரசூல் (ஸல்) அவர்கள் மக்களுக்கு கட்டளை இட்டார்கள் நோன்பை விடுமாறு.

 

ஆதாரம்-2 

முஹம்மத் பின் இஸ்மாயில் அஸ்ஸானியிடம் இருந்து அபூபக்கர் நைஸாபூரி அறிவிக்கிறார் ரசூல் (ஸல்) அவர்கள் மக்களுக்கு கட்டளை இட்டார்கள் நோன்பை விடுமாறு.

 

ஆதாரம்-3

 ஹுஷைமிடம் இருந்து அப்துர் ரஸ்ஸாக் அறிவிக்கிறார் ரசூல் (ஸல்) அவர்கள் மக்களுக்கு கட்டளை இட்டார்கள் நோன்பை விடுமாறு.

 

இந்த மூன்று ஆதாரங்களையும் எடுத்துக்காட்டி பார்த்தீர்களா ரசூல் (ஸல்) அவர்கள் வெளியில் இருந்து வந்த தகவலை ஏற்றுள்ளனர். ஆகவே பிறை பார்த்ததாக எங்கிருந்து தகவல் வந்தாலும் ஏற்கலாம் என்கின்றனர். 

 

நமது பதில்:-

ஆதாரம்-1 

அவர்களின் முதலாவது ஆதாராமாக எடுத்துக்காட்டும் ஹதீஸானது, ஷுஃபாவிடம் இருந்து ஒன்பது மாணவர்கள் இதை அறிவிக்கிறார்கள். அதில் எட்டுப்பேர் அவர்களுக்கு கட்டளையிட்டார்கள் என்றும் சுஃபியான் என்ற ஒருவர் மாத்திரம் மக்களுக்கு கட்டளையிட்டார்கள் என்று சொல்கிறார். ஹதீஸ்கலை அறிஞ்சர்களின் ஏகோபித்த கருத்து  குறிப்பிட்ட ஒரு மார்க்கச்சட்ட   ஹதீஸ்கள்   இரு மாறுபட்ட கருத்துக்களை தரும் போது  அதில் அதிகமாணவர்கள் அறிவிக்கும் கருத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்  என்பதாகும். ஏனெனில் ஒருவரைவிட எட்டுப்பேர் தவறிழைக்க வாய்ப்புக்கள் மிகக்குறைவு என்பதனால் ஆகும். இவ்வாறான ஹதீஸ்களை 'ஷாத்' நிலை (அரிது) என்று சொல்லி ஹதீஸ்கலை அறிஞ்சர்கள் ஏற்பதில்லை.

 

ஆதாரம்-2

அவர்களின் இரண்டாவது ஆதாராமாக எடுத்துக்காட்டும் ஹதீஸானது, அபூபக்கர் நைஸாபூரி என்பவர் தாரகுத்னி என்ற ஹதீஸ் கிரந்தத்தில் மட்டும் நான்கு வெவ்வேறுபட்டவர்களிடம் இருந்து அறிவிக்கும் ஹதீஸ்கள் பதிவாகியுள்ளது. 

இதில் முஹம்மத் பின் இஸ்மாயில்

வழியாக அறிவிக்கப்படும் போது மட்டுமே மக்களுக்கு என்று அறிவிக்கிறார். மற்றைய மூன்று அறிவிப்பாளர்களிடம் இருந்து அறிவிக்கும் போது அவர்களுக்கு என்று அறிவிக்கிறார். எனவே ஒரு செய்தியை பலரிடமிருந்து அறிவிக்கப்படும் போது ஒருவரிடமிருந்து மாத்திரம் மாற்றமாக வந்தால் அச்செய்தியும் பலகீனமானதாகும். இன்னுமொரு பலகீனமும் இருக்கிறது மக்களுக்கு என்று அறிவிக்கும் ஆசிரியரான முஹம்மத் பின் இஸ்மாயில் என்பவர் யாரென்றே அறியப்படாதவர். எனவே இந்த ஹதீஸையும் ஏற்கமுடியாது. 

 

ஆதாரம்-3

மூன்றாவதாக முன்வைக்கிறார்கள் ஹுஷைமிடம் இருந்து அப்துர் ரஸ்ஸாக் அறிவிக்கிறார் மக்களுக்கு கட்டளையிட்டார்கள் என்று. இந்த ஹதீஸும் 'ஷாத்' நிலையாகும். ஏனெனில் ஹுஷைம் என்பவரிடம் இருந்து ஐந்து  பேர் அறிவிக்கிறார்கள் அதில் ஒருவராகிய அப்துர் ரஸ்ஸாக் மாத்திரமே மக்களுக்கு என்று அறிவிக்கிறார். ஆகவே இன்டெர் நஷனல் பிறையை ஆதரிப்பவர்களுக்கு இந்த ஹதீஸிலும் எவ்வித ஆதாரமும் இல்லை.

எனவே பலகீனமான அறிவிப்புக்களை வைத்துக்கொண்டு மக்களுக்கு கட்டளை இட்டார்கள் என்று வாதிடுவது அர்த்தமற்றதாகும்.

 

 

சர்வதேச பிறையை பின்பற்றுபவர்களின் மற்றும் ஒரு கேள்வி வாகனக்கூட்டத்தினர் பிறையை பார்த்துவிட்டு ஏன் நோன்பை நோற்ற நிலையில் நபியவர்களிடம் வந்தார்கள்?

 

நமது பதில்- சஹாபாக்கள்  மாதம் என்பது முட்பது நாளாகும் என்றே அறிந்து வைத்திருந்தனர். எனவே அவர்கள் பிறையை பார்த்த பின்பும் நோன்பு நோற்ற நிலையிலேயே வந்தாந்தார்கள். 

மாதம் என்றாலே முட்பது நாள் தான் என்று நாம் சும்மா சொல்லவில்லை இதற்கு ஆதாரமாக நிறைய ஹதீஸ்கள் இருக்கின்றன. 

பின்வரும் ஹதீஸும் இதை விளக்குகின்றது.

"உம்மு ஸலமா (ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் 'ஒரு மாதம் தம் மனைவியருடன் சேர்வதில்லை' என்று சத்தியம் செய்திருந்தார்கள். இருபத்தி ஒன்பது நாள்கள் முடிந்தும் (இல்லம்) திரும்பினார்கள். அவர்களிடம் 'நீங்கள் ஒருமாதம் (வீட்டிற்கு) வரமாட்டீர்கள் என்று சத்தியம் செய்திருந்தீர்களே! என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'ஒரு மாதம் என்பது இருபத்தொன்பது நாள்களாகவும் அமையும்!" என்றார்கள்" 

(புகாரி-1910)

எனவே இதை நாங்கள் அவர்களுக்கான பதிலாக சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம். 

 

அப்படியானால் எங்கிருந்து வந்த பிறையை ரசூல் (ஸல்) அவர்கள் ஏற்றார்கள்.பின்வரும் ஹதீஸ் இதை உறுதி செய்கிறது. 

 

ரமளானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு கிராமவாசிகள் வந்து நேற்று மாலை பிறை பார்த்தோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறும்பெருநாள் தொழுகை தொழும் திடலுக்குச் செல்லுமாறும் மக்களுக்குக் கட்டளையிட்டனர்”.

(அபூதாவூத்-)

 

மேற்கண்ட பிறை தகவலை ரசூலுல்லாஹ்  ஏற்றுக்கொண்டார்கள். ஏனெனில் கிராமம் என்பது ஒவ்வொரு ஊரை சூழ்ந்துள்ள மற்றும் ஒரு ஊரைச் சார்ந்துள்ள பகுதியாகும்.

 

உலகப்பிரையை ஆதரிப்பவர்களின் வாதம். கிராமம் என்று சொல்வது மதீனாவை சுற்றியுள்ள சிறிய பகுதிகளை அல்ல. மக்காவிலும் இந்திந்த பெயரில்  கிராமங்கள் இருக்கின்றனவே! அவைகளில் ஒன்றைத்தான் இந்த ஹதீஸ் குறிக்கின்றது என்று சொல்கிறார்கள்.நமது கருத்து என்னவென்றால் மதீனாவில் அறிவிக்கப்பட்ட ஹதீஸ்களில் மதீனாவை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கிராமங்களைத்தவிர மற்றைய கிராமங்களை பெயர் குரிப்பிட்டே வந்துள்ளது. 


உதாரணத்துக்கு கண்டியை நமது ஊர் என்றால் அதை சுற்றியுள்ள பகுதிகளை மொட்டையாக கிராமம் என்போம்.

அதே நேரம் யாழ்பானத்துக்கு, அல்லது திருகோணமலைக்கு அருகே உள்ள கிராமங்களை யாழ்பாணத்தின் பேரைச்சொல்லி அல்லது அந்தந்த பிரதேசத்தின் பேரைச்சொல்லி தான் கிராமமென்போம். 

 

நமக்கு ஏதாவது வீட்டு வேலைக்கு ஆள் தேவையானால் நாம் கேட்போம் நமது  தோட்டத்தை துப்புரவு செய்ய ஊருக்குள் இருந்து இருவரை தேடித்தாருங்கள் என்றால் நீங்கள் சொல்வீர்கலா ஊர் என்று சொல்லிவிட்டார்கள் இது கண்டி கிடையாது. கொழும்பு அல்லது புத்தளம் என்கின்ற ஊராகத்தான் இருக்க வேண்டும் என்பீர்களா?  

 

மேலும் ரசூல் (ஸல்) மதீனாவில் ஆட்சி செய்யும் போது இறங்கிய குரான் வசங்களும்  இதற்கு ஏற்ப தான் கூறுகின்றது. 

 

"கிராமவாசிகளில் போருக்குச் செல்லாது இருக்க தங்களுக்கு அனுமதி வேண்டி காரணம் கூறுவோர் உம்மிடம் வந்தனர். அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் பொய் கூறியோர் போருக்குச் செல்லாது தங்கிக் கொண்டனர்" 

(அல்குரான்-9:90)

 

ரசூல் (ஸல்) காலத்தில் யுத்தங்கள் திடீர் திடீர் என்று தான் நடந்துள்ளது. அவ்வாறு நடக்கும் போது மதீனாவையும்

அதைச்சுரியுள்ளவர்களுக்கும் தான் பங்குகொள்ள அதிகதிகம் சந்தர்ப்பம் இருந்துள்ளமையாலே அல்லாஹ் இப்படி குறிப்பிடுகிறான்.

 

மேலும் வேறு ஒரு இடத்தில் அல்லாஹ் சொல்கிரான்.

 "உங்களைச் சுற்றியுள்ள கிராமவாசிகளிலும், மதீனாவாசிகளிலும் நயவஞ்சகர்கள் உள்ளனர்".

(அல்குரான்-9:101)

 

எனவே 'இரண்டு கிராமவாசிகள்' என்று சொல்லும் ஹதீஸில் ரசூல் (ஸல்) வாழ்ந்த மதீனாவை சுற்றியுள்ள பகுதியைத்தான் குறிகின்றது என்பது மேலும் உறுதியாகிறது. 

 

 

பிறை தென்பட்டட்டதும் நோன்பை   விட வேண்டுமா?

 

நாம் ஏற்கனே சொன்னது போல் சூரியன் நேரத்தையும், சந்திரன் காலத்தையும் காட்டக்கூடியது. இவை நாம் இருக்கும் பிரதேசத்துக்கு மேல், நமக்கு வரும் போது தான் அது நமக்கு நேரத்தையும், காலத்தையும் காட்டும்.  இதற்கு மாற்றமான கருத்தில் உள்ளவர்கள் சொல்கிறார்கள் இல்லை ஒரு நாட்டில் பிறை தென்பட்டால் அது முழு உலகிற்கும் தான் என்கிறார்கள்.

இது மார்க்கம் சொல்லாத நடைமுறைக்கு சாத்தியம் அற்ற விடயம். ஏனெனில் இவர்கள் எவ்வித ஆராய்ச்சியும் முறையாக செய்யாமலே 

சர்வதேச  பிறையை பின்பற்றுகின்றனர். 

 

மேலும் வேடிக்கை என்னவென்றால் சர்வதேச பிறையை நாங்கள் பின்பருகிறோம் 

என்று சொல்பவர்கள் அதிலாவது உண்மையாளர்களாக இருக்கிறார்களா! அதுவும் இல்லை. இவர்கள் வெறும் பேச்சுக்கு தான் சர்சதேச பிறை என்கிறார்கள் ஆனால் உண்மையில் இவர்கள் பின்பற்றுவது சவூதி பிறையை மாத்திரமே. சவூதிக்கு முன் எத்தனையோ தடவைகள் மொரோக்கோ,  சேர்பியா போன்ற நாடுகள் பிரைகண்டும் அதை எப்போதாவது ஏற்றதுண்டா?

மேலும் சவூதிக்கும் இலங்கைக்கும் மூன்று மணி நேரம் மட்டுமே வித்தியாசம் இருப்பதால் இவர்கள் உண்மையான பிரச்சினையை உணர்வதில்லை.

 

உலகப்பிறை ஆதரவாதிகளிடம் நாம் கேட்கிறோம். போன மாதம் சவூதியை பாத்து தான் நீங்கள் இஸ்லாமிய மாதத்தை துவங்கினீர்கலா? மற்ற மாதங்களில் உள்ள மார்க்க கிரியைகளை சவூதி பிரையின் அடிப்படையில் தான் செய்கிறீர்களா? 

அதை தவறாமல் நீங்கள் செய்தாலும் சவூதி வருடத்துக்கு நான்கு மாதங்கள் தானே பிறையை முறையாக பாக்கிறார்கள். மீதியுள்ள மாதங்களை 20-25 வருடங்களுக்கு கணக்கிடும் விதமாக முன்னரே தயாரித்து வைத்துள்ள 'உம்முல் குரா' கலேண்டரை தானே பின்பற்றுகிறார்கள். எனவே தவறிலே தவறு செய்யும் நிலைமை இதில் உள்ளது.

 

 

 உலக நாடுகளுக்கிடையிலான நேர வேறுபாடுகள்.

 

பிறை கண்ட தகவலை கேள்வியுற்றதும் நோன்பை விடவேண்டும். சர்வதேச பிறையை

நியாயப்படுத்துவோர் அவர்கள் சொல்லும் வாகனக்கூட்ட ஹதீஸின் படி 

உண்மையாளர்களாக இருந்தால் பிறைத்தகவலை கேள்வியுற்றதும் நோன்பை விட வேண்டும். 

Kiritimati என்று ஒரு நாடு உள்ளது. அதே போல் Alofi  என்று ஒரு நாடும் உள்ளது. இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நேர வித்தியாசம் 25 மணி நேரமாகும். 

 

 http://www.happyzebra.com/timezones-worldclock/difference-between-Alofi-and-Kiritimati.php

 

 

 உதாரணத்துக்கு Kiritimati  என்ற நாட்டு மக்கள் 29 நோன்பை முடித்துக்கொண்டு  மாலை 6.30க்கு பிறை காண்கிறார்கள் என்று

வைத்துக்கொள்வோம். அப்பொழுது Alofiயில்  உள்ளவர்கள் 28 நோன்பை  பிடித்த நிலையில்  மாலை 5.30 மணியில் இருப்பார்கள். முதல் நிலை பிறைத்தகவலை கேட்டதும்  Alofi மக்கள் நோன்பை விட வேண்டும். அப்படி விட்டால், Alofi மக்கள் பிடித்த நோன்பின் எண்ணிக்கை 27 ஆகும்.

 

"ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் மாதம் என்பது 29 அல்லது 30 ஆகும்"

(புஹாரி-1913)

 

 பிறை தகவல் கேட்டதும் 5.30க்கு நோன்பை விடாமல் எப்படியோ பூரணப்படுத்தினார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படி இருந்தும் Alofi மக்கள் 28 நோன்பை பூரணப்படுத்திய நிலையில் அடுத்தநாள் காலை பெருநாள் திடலுக்கு செல்ல வேண்டும். அதையும் செய்ய முடியாது. எனவே இதுக்கும் மார்க்கத்தில் அனுமதி இல்லை.   இப்படி ஏதும் இல்லாவிட்டால்  உதாரணாக இன்றைக்கு திங்கட்கிழமை கேள்வியுற்ற பிறைத்தகவலுக்கு நாளை மறுநாள் புதன் கிழமை பெருநாள்  கொண்டாடச்சொல்கிரார்களா? 

ரசூல் (ஸல்) அவர்கள் குழப்பமான நிலையில் விட்டுசென்றார்களா? நிச்சயமாக இல்லை. எப்படி நபியவர்கள் சொன்னார்கள்.

 

 

 "அல்லாஹ்வின் மீது ஆணை! வெள்ளை வெளேர் என்ற பாதையில் நான் உங்களை விட்டுச் செல்கிறேன். அதில் இரவும் பகலும் சமமானதாக இருக்கும்''

 (இப்னுமாஜா-5)

 

ஆகவே நாம் மேல் கேட்டவைகளுக்கும் இவர்களிடத்தில் ஆரோக்கியமான பதில் இல்லை. 

 

 

சர்வதேச பிறை ஆதரவாளர்களின் பகலில் இருந்து நோன்பை துவங்கும் சட்டம்.

 

நாம் கேட்கிறோம் ரமலான் பிறை கண்டதும் நோன்பை துவங்க வேண்டும் என்று மார்க்கம் சொல்கிறதே! உதாரணதுக்கு 

Baker Island என்னும் நாட்டில் பிறை பார்த்து விட்டார்கள் மாலை 7.30 மணிக்கு அந்த  நேரம் இலங்கையில் காலை 11.30ஆக இருக்கும் இப்பொழுது இலங்கையில் உள்ளவர்கள் எப்படி நோன்பை துவங்குவார்கள். என்று நாம் கேட்கிறோம்.  இதற்கு இவர்கள் சொல்வது நடை முறைக்கும் உலக அமைப்புக்கும் சாத்திய மற்ற வாதமாகும்.

 

சர்வதேச பிறையை பின்பற்றுபவர்களின் பதில்- ரமலான் கடமையாவதற்கு முன் ஆஷுரா நோன்பு தான் கடமையான நோன்பாக இருந்ததையும், அந்த நோன்பின் முதல் நாள் ரசூல் (ஸல்) அவர்கள் காலை நேரத்தில் தமது தோழர்களை அனுப்பி மக்களை எழுப்பி அதிலிருத்து நோன்பை துவங்க சொன்னதையும் சான்றாக காட்டுகின்றனர். 

 

 

நமது பதில் என்னவென்றால்

ஆஷுரா நோன்பு ரமழான் கடமையாவதற்கு முன் இருந்திருந்தாலும், அதற்கு ரமலானை போன்ற சட்ட திட்டங்கள் இருந்திருக்கவில்லை. மேலும் ஆஷுரா நோன்பு அறிவிக்கப்பட்டதும் முதல் நாள் விதிவிளக்காக காலை வேளையில் 

நோன்பு பிடிக்க நபியவர்கள் அனுமதித்தார்கள். சுன்னத்தான நோன்புகளைக்கூட ரசூல் (ஸல்) அவர்கள் பஜ்ர் தொழுதுவிட்டு வருவார்கள், வீட்டினுல் நுழைந்ததும் சாப்பிட ஏதாவது உள்ளதா என்று கேட்கப்படும், இல்லை என்று பதில் வந்ததும் நான் நோன்பாளியாக இருந்து கொள்கிறேன் என்று சொல்வதாக ஹதீஸ் வந்துள்ளது.

 

ஆனால் ரமழான் நோன்பு இவற்றுக்கு மாற்றனான முறையான சட்ட திட்டங்களைக்கொண்டது.

 

மேலும் இவர்கள் சொல்கிறார்கள்.

பிரைச்செய்தி பிற்பகல் 3 மணிக்கு கேள்வியுற்றால் அதிலிருந்தும் நோன்பை துவங்கலாம் என்றும் கூறுகின்றனர். எவ்வளவு அர்த்தமற்ற வாதங்கள். 

கடமையான நோன்பை எப்பொழுது துவங்க வேண்டும், எப்பொழுது முடிக்க வேண்டும் என்று ரசூல் (ஸல்) அவர்களும் அல்லாஹ்வும் அழகிய முறையில் வழிகாட்டியுள்ளார்கள்.

 

 

"நோன்பு பிடிக்கும் முடிவை யார் இரவிலேயே எடுக்கவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்" 

(நசாயீ)

 

நோன்பின் நேரத்தைப்பற்றி அல்லாஹ் சொல்லும் போது,

 

"வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்"

(அல்குரான்-2:187)

 

எனவே சர்வதேச பிறையை ஆதரிப்பவர்களின், ஒரு நாளில் எந்த நேரத்திலும் நோன்பை துவங்கலாம் என்ற வாதமும் அர்த்தமற்றதாகி விடுகின்றது. 

 

சர்வதேச பிறையை இவர்கள் ஏன் நியாயப்படுத்துகிறார்கள்?

 

இவ்வளவு தெளிவான அல்குரான் வசனங்களும், ஹதீஸ்களும், விஞ்சான காரணிகளும் ஒவ்வொரு பகுதி மக்களும்  தத்தமது பிறை பார்க்க வேண்டும் என்று தெளிவாக சொல்லியும் சர்வதேச பிறைதான் சரி என்று வாதிடுவதற்கு ஒரு காரணமும் இருக்கிறது.

 

பின்வரும் ரசூல் (ஸல்) அவர்களின் ஹதீஸை தப்பாக விளங்கியதே இதற்கு காரணமாகும்.

 

 "பிறை பார்த்து நோன்பு பிடியுங்கள். பிறை பார்த்து நோன்பை விடுங்கள். 

உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் முட்பதாக பூர்த்தி செய்யுங்கள். பிறை பற்றி இருவர் சாட்சி சொன்னால் ஏற்றுக்கொள்ளுங்கள்!

(சுனனுல் குப்ரா-2437)

 

இந்த ஹதீஸில் வரும் வாசகமாகிய இருவர் சாட்சி சொன்னால் ஏற்றுக்கொள்ளுங்கள் என்பதை உலகில் எங்கிருந்து சொன்னாலும் ஏற்க வேண்டும் என்று புரிந்த ஒரே காரணம் தான் இவர்களின் சர்வதேச பிறையின் பின்னணி. 

 

மார்க்கத்தில் ஒரு சட்டத்தை புரிவதாயின் அது சம்பந்தப்பட்ட எல்லா அல்குரான், சஹீஹ் ஹதீஸ்கலை எடுத்து ஆராய்ந்து தான் முடிவெடுக்கவேண்டும். மேலும் இந்த ஹதீஸ் அல்குரானின் கருத்துக்கும், மற்ற ஹதீஸ்களுக்கும் முரணாக அமைந்திருக்கிறதா அதுவும் இல்லை. இந்த ஹதீஸின் இறுதிப்பகுதியில்  இருந்து அதிக பச்சம் என்ன விளங்கலாம் என்றால், பிறையை பார்த்ததாக குறைந்த பட்சம் இருவராவது சாட்சி சொல்ல வேண்டும். அனைவரும் பார்த்து உறுதிப்படுத்த வேண்டியதில்லை. என்பவற்றைத்தான் புரிய முடியும்.

உலகில் எங்கு பிறை பார்த்தாலும் அந்த சாட்சியத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்வது இந்த ஹதீஸ் சொல்லாத, மற்ற ஆதாரங்களுக்கு முரணான கருத்தாகும்.

  

ஒரு  வாதத்திற்கு நாம்  மேற்கண்ட  ஆதாரங்களில் ஒவ்வொரு பிரதேஷத்தினரும் அப்பகுதியின் பிறையை அவரவர்கள் தான்  பார்க்க வேண்டும் என்று சொல்லாமல் இருந்திருந்தாலும். சர்வதேச பிறைக்காக  அவர்கள் காட்டும் இந்த ஹதீஸ் அர்த்தம் தராது. ஏனெனில் இந்த ஹதீஸில் என்ன சொல்லப்படுகிறது என்றால் 'இருவர் சாட்சி சொன்னால்' ஏற்றுக்கொள்ளுங்கள்"  

உதாரணத்துக்கு சவூதியில் உள்ளவர்கள் பிறை பார்த்தல் சவூதியில் உள்ள பிரைக்குழு (Authority)  விடம் தான் தாம் பிறை பார்த்ததாக சாட்சி சொல்வார்கள். 

அந்த சாட்சியத்தை ஏற்று சவூதி அரசாங்கம் மக்களுக்கு அறிவிக்கும். சவூதியில் பிறை பார்ப்பவர்கள் இவர்களிடம் தான் சாட்சி சொல்கிறார்களா?

எனவே சர்வதேச பிறையை பின்பற்றுபவர்கள் சவூதி அரசு தமது மக்கலுக்குச்சொல்லும் தகவலை தாமும்  எடுத்து  ஹதீஸ் படி  தான் செயல் படுத்துகிறோம் என்று வாதிடுகின்றனர். 

 

ஹதீஸின் தெளிவான வாசகமும், இவர்களின் வாதப்படியும் 'சாட்சி சொன்னால்' என்று தான் அமைந்திருக்கிறது. தகவல் சொன்னால் என்று கிடையாது.

ஆகவே இவர்கள் பலமானது எனக்கருதும் இந்த ஹதீஸும் இவர்கள் சொல்லும் கருத்தைச்சொல்லவில்லை.

 

மேலும் இந்த ஹதீஸின் அடிப்படையில் இவர்கள் முன் வைக்கும் அடுத்தவாதம், சவூதியில்

ஒருவர் மரணித்தால் அதைக்கேட்டு அவருடைய மனைவி இத்தா இருக்கிறார். இதை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் ஏன் பிறையை மாத்திரம் ஏற்கக்கூடாது என்கிறீர்கள் இது நியாயமா என்று நம்மைப்பார்த்து கேட்கின்றனர்.

நாம் ஏற்கனவே சொன்னது தான் இதற்கும் பதில். சவூதியில் ஒருவர் மரணித்துவிட்டால் இலங்கையிலுள்ள அவரது வீட்டிற்கு மரணித்ததாக தகவல் தான் சொல்வார்கள், சாட்சி அல்ல. என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். 

 

சர்வதேச பிறையை சார்ந்தவர்களின் என்னொரு வாதம். பிறையை ஒவ்வொரு நாட்டுக்குமாக பிரிக்கிண்றீர்களே ரசூல் (ஸல்) அவர்கள் தான் இந்திந்த அளவில், நாடுகளின்  எல்லைகள் இவ்வளவாக இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு போனார்களா? என்று கேட்கின்றனர். இதே மாதிரியான கேள்வியை நமக்கும் கேட்கலாம்.

ரசூல் (ஸல்) அவர்கள் சுருக்கித்தொலும் சட்டம் நிறைவேற இரண்டு  நிபந்தனைகளை முன்வைத்தார்கள். ஒன்று 25Km க்கு மேல் பிரயாணம் செய்ய வேண்டும். இரண்டு ஊரை விட்டு வெளியே செல்ல வேண்டும். இந்த ஹதீஸுக்கும் இவர்கள் இப்படி தான் கேட்பார்களா?

 

முஆவியா (ரலி) யின் ஆட்சிக்காலத்தில் சிரியா, ஈராக், மதீனா எல்லாம் ஒரு நாடாகத்தான் இருந்தது. ஒரே நாட்டுக்குள் இருந்து வெவ்வேறு மாநிலத்தில் இருந்து வந்த தகவலை இப்னு அப்பாஸ் அவர்கள் இது ரசூல் ( ஸல்) அவர்களின் வழிமுறை இல்லை என்று பிறைச்செய்தியை ஏற்றுக்கொள்லாததை நாம் மேல்லே விளக்கினோம். 

 

மேலும் ரசூல் (ஸல்) அவர்களின் வாகனக்கூட்ட ஹதீஸில் இருந்து

பெறக்கூடிய  விடயம் என்னவென்றால் இந்தியா போன்ற பெரிய நாடுகளில் உள்ள மாநிலங்களுக்கு ஏற்ப பிறையை பார்த்தாலும் தவறில்லை என்பதாகும். ஏனெனில் வாகனக்கூட்டம் ஒட்டகத்தில்  ஒரு நாள்  பிராயணித்து வெகு தூரம் சென்றிருக்க முடியாதென்பது புலப்படுகின்றது. 

மேலும் ஒரு நாட்டிற்குள் உள்ள மாநிலங்களுக்கிடையே கூட தொழுகை நேர வேறுபாடுகள் 20 முதல் 40  நிமிட  நேர வேறுபாடுகள் காணப்படுகின்றன. 

எனவே பிறையானது   அதிகபட்சமாக ஒரு நாட்டை தான் கட்டுப்படுத்தும். 

 

இதை ஒட்டி சர்வதேச பிறையை  பின்பற்றுபவர்கள்  கேட்கின்றனர். இந்தியாவில் பிறை காணப்பட்டு நோன்பை, பெருநாளை நாளை துவங்க இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த பிறையை இந்தியா எல்லையிலுள்ள பாகிஸ்தான் குடிமகனும் காணுகிறார் ஆனால் பாகிஸ்தானில் பிறை காணாததனால்  பாகிஸ்தான் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்கிறது. இப்பொழுது எல்லையில் இருந்தவருக்கு என்ன சொல்லப்போகிறீர்கள்? அதே போல் பாகிஸ்தானில் வசிப்பவர் கடலில் மீன் பிடிக்க அடுத்த எல்லைக்கு  சென்ற போது தலைப்பிறையை காண்கிறார். இவர்களுக்கு என்ன சொல்லபோகிறீர்கள் என்றும் கேட்கின்றனர்.

 

 ரசூல் (ஸல்) அவர்களின் வழி முறையில் பிறை சம்பந்தப்பட்ட அனைத்தையும் கடைபிடித்த பின் இறுதியாக உள்ள வழிமுறை நமது பிறை எல்லையை தீர்மாணிப்பதாகும். இதை நமது கையில் தந்துவிட்டார்கள். பின்வரும் ஹதீஸ் இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் உள்ளவர்கள் கூட அரசியல், பொருளாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு, மாணியங்கள் பெற்றுக்கொள்ளுதல் போன்ற காரணங்களினால் எந்த பிரதேசத்தை, எந்த பிரதேசத்தின் பிறையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது.

 

நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்''என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.

(திர்மிதீ-631)

 

மேலும் சிலர் தான் ஏற்று இருக்கிற சவூதி பிறைக்கு எவ்வித மார்க்க ஆதாரமும் இல்லை என்னும் பட்சத்தில் மேற் கண்ட ஹதீஸை தமக்கு ஆதாரமாக கூறிவருகின்றனர். 

 

இந்த ஹதீஸைப்பற்றி மேலே நாம் விளக்கி இருக்கிறோம். இருந்தும் இன்னோம் ஓரிரு விடயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

 

முதலில் பிறை சம்பந்தமாக குரான், ஹதீஸ் கட்டளையிட்டுள்ள 12 -13 ஹதீஸ்களுக்கு முரணில்லாமல் இதை விளங்க வேண்டும்.

 

 

 

தமக்கு வசதியான தினத்தில் மக்களுக்கு முடிவு செய்ய முடியுமா? இவர்களின் புரிதலின் அடிப்படையில் மக்கள் எல்லோரும் சேர்ந்து ஞாயிற்றுக்கிழமை பெருநாளை எடுக்கலாமா? அன்றைக்கு 99 சதவீதமானவர்கள் மற்றும் பாடசாலைகள் கூட விடுமுறையாக இருக்கிறது. எனவே இதுவும் அர்த்தமற்ற வாதமாகும்.

 

எனவே ஆதாரங்களின் அடிப்படையில் சர்வதேச பிறை தவறு என்பதை நிரூபித்தோம்.

அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு பகுதி  மக்கள், அல்லது தத்தமது நாட்டைச்சேர்ந்தவர்கள் தான் தங்களது பிறையை பார்த்து மாதத்தை முடிக்க, துவங்க வேண்டும் என்பதையும் நாம் தெளிவாகவே விளக்கியுள்ளோம்!

 

இல்ஹாம் தாஸிம்

SLMFC  (UK)

 

News flash

 •  ஜனாஷாவிட்கு செய்ய வேண்டிய கடமைகள்

   

  =========================

  அஸ்ஸலாமு அழைக்கும் 

  ஆண்களுக்கான மார்க்க வகுப்பு 

  திங்கள் கிழமை மாலை 7:30 மணி முதல் 9:30 மணி வரை 

  Langley Green Community Centre ல்

  நடைபெறும் உங்கள் அனைவரையும் 

  அன்புடன் அழைக்கின்றோம்  

Events

Prayer Timetable

 If you cant View this
Download Adobe reader