தஃவா செய்வதன் முக்கியத்துவம்

Print

 நன்மையை ஏவி தீமையை தடுத்தல்!

நாம் வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டுள்ள இஸ்லாம் மார்க்கத்தில் நாம் எதை அறிந்து வைத்திருக்கிறோமோ அதை நமக்கு மாத்திரம் வைத்துக்கொள்ளாமல் மற்றவர்களுக்கும் எடுத்துச்சொல்கிற முக்கியமான கடமை நமக்குள்ளது.

ரசூல் (ஸல்) அவர்கள் தங்களது இருதிப்பேருரையில் சொன்னார்கள் "இங்கு வந்தவர்கள் வராதவர்களிடம் போய் சொல்லிவிடுங்கள்". புஹாரி-1741 

நாம் அன்றாடம் காணக்கூடிய காட்சி நமது குடும்பத்தார்கல், நண்பர்கள், ஊர் மக்கள் தவறான பாதையில் சென்று நரகத்தின் விளிம்பில் நின்ருகொண்டிருக்கிரார்கள். அதிலிருந்து அவர்களைக்காப்பாற்றி சரியான பாதையைக்காட்டும் வேலையை நாம் செய்கிறோமா? 
நாம் என்ன நினைக்கிறோம் என்றால் இதைச்செய்வதட்கு என்று சில மார்க்க அறிஞ்ஞர்கள், உலமாக்கள்  இருக்கிறார்கள். இது நமது வேலை இல்லை என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம்.ஆனால் ரசூல் (ஸல்) அவர்கள் சுமத்திய பொறுப்பு ஆலிம்கல் மீது மட்டுமல்ல அனைவரையும் சார்ந்தது.

எனவே நாம் புரிந்து கொள்ள வேண்டும் நமக்கு எப்படி தொழுகை கடமையோ, நோன்பு கடமையோ அதைப்போல் அடுத்தவருக்குச்சொல்வதும் கடமை. ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் "என்னிடமிருந்து ஒரே ஒரு வசனம் கிடைத்தாலும் சொல்லிவிடுங்கள்" புஹாரி- 1741

 

நாம் நினைக்கிறோம் சொல்வதென்றால் நாம் ஏழு வருடம் படிக்கவில்லையே, குரான் முழுவதும் தெரியவில்லையே என்று தயங்கி பின்வாங்குகிறோம். ஆனால் நபியவர்களின் கட்டளை ஒரு விடயம் தெரிந்தாலும் சொல்லுங்கள் என்பதாகும்.

 

அல்லாஹ்வும் கூட மற்றவர்களுக்கு சொல்லவேண்டும் என்பதை குரானில் சொல்கிறான்.

"நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக  இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்".

குரான்-3:110

 

இன்னொரு இடத்தில் அல்லாஹ் சொல்கிறான். நன்மையை ஏவி தீமையை தடுப்பது ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்கள் மீதும் கடமை. "நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள்.

குரான்-9:71

 

எனவே தவறுகளை சுட்டிக்காட்டவேண்டும் என்பது ஆண்கள், பெண்கள் இரு பாலார் மீதும் கடமையானதொன்று.

 ஒரு சந்தர்ப்பத்தில் தான் இதற்கு விதி விளக்கு உண்டு.  ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் "ஒருவர் தீமையை கண்டால் அதை அவர் கையால் தடுக்கட்டும். அதற்கு சக்தி பெற வில்லை என்றால், வாயால் தடுக்கட்டும். அதுவும் முடியவில்லை என்றால் மனதால்வெறுக்கட்டும். இதுவே ஈமானின் கடைசி நிலை" முஸ்லிம்-78

 

 

சில அரசாங்கங்கள், அதிகாரிகள் மார்க்கத்துக்கு முரணாக செய்யும் போது கூட நமது சக்திக்கு ஏற்ப அதை அவசியம்  தடுக்க வேண்டும் என்பதை மேலே உள்ள ஹதீஸ் மூலம் விளங்கிக்கொள்ளலாம். 

 

பெற்றோருக்கு சீ என்றவார்த்தை கூட சொல்லக்கூடாது என்று சொல்லும் இஸ்லாம், மார்க்கத்துக்கு முரணான காரியத்தை அவர்கள் சொல்வார்கலாயின் அதை கேட்கக்கூடாது என்பதையும் சேர்த்தே சொல்கிறது. ரசூல் (ஸல்) அவர்கள்  சொன்னார்கள் "கட்டுப்படுதல் என்பது  அல்லாஹ்வுக்கு மாத்திரம் தான் படைப்பினங்களுக்கு கிடையாது" 

இப்னு மாஜா- 3601 

 

பெற்றோர் சொன்னபடி நடத்தல்,உறவை பேணி நடத்தல், ஒற்றுமையாக இருத்தல் இவற்றை சிலர் தவறாக புரிந்து கொண்டு மார்க்கத்தில் நன்மையை ஏவி, தீமையை தடுக்கும் கடமையை செய்யாது விடுகின்றனர். இதற்கு மார்க்கத்தில் அளப்பெரும் கூலி உண்டு என்பதை அறியாதவர்களாக இருக்கின்றனர். இவைகளிலும், மற்ற மார்க்க விடயங்களிலும் கூட உள்ள இஸ்லாம் சொல்லும் அடிப்படை கொள்கை என்னவென்றால் அல்லாஹ்வுக்கு மாறு செய்யா விடயங்களில் பெற்றோருக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்யா விடயங்களில் ஒற்றுமையாக இருத்தல் வேண்டும்.  அல்லாஹ்வுக்கு மாறு செய்யா விடயங்களில் அமீருக்கு (ஆட்சித்தலைவருக்கு) கட்டுப்படுதல் வேண்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்யா விடயங்களில் சமரசம் செய்தல் வேண்டும். என்ற வேறுபாட்டை சரியாக தெரிந்து வைத்திருத்தல் வேண்டும்.

 

வரதட்சணை வாங்கக்கூடாது என்று அல்லாஹ் சொல்கிறான்.இதற்கு மாற்றமாக பெற்றோர் சொன்னால் கேட்கக்கூடாது. அவ்விடயத்துக்காக பெற்றோர்கள் கோபித்துக்கொண்டால் அதை அல்லாஹ்வுக்காக பொறுத்துக்கொண்டால் அல்லாஹ் சொல்கிறான் இதற்காக நான் உனக்கு மறுமையில் அர்ஷ்ஷுடைய நிழல் தருவேன் என்று. ரசூல் (ஸல்) சொன்னார்கள் "அல்லாஹ்வுக்காக ஒருத்தரை விரும்புதல் அல்லது அல்லாஹ்வுக்காக ஒருத்தரை வெறுத்தல்" புஹாரி- 660

 

ஒற்றுமையா இருத்தல், அமீருக்கு கட்டுப்படுதலும் இதே கோட்பாட்டில் தான்  இஸ்லாத்தில்  சொல்லப்பட்டுள்ளது. 

 

மேலும் தீமையை தடுக்கா விட்டால் அது நம்மையே அழித்துவிடும் என்பதற்கு பின்வரும் ஹதீஸை ரசூல் (ஸல்) அவர்கள் சொல்லியுள்ளார்கள்.

 

 

 

"இரண்டு மாடிகொண்ட ஒரு கப்பலில் சிலர் கடல் பிரயாணம் செய்கின்றனர். கீழ் உள்ளவர்கள் தங்கள் தேவைக்கு மேல் ஏறிச்சென்று தண்ணீர் எடுத்து வந்தனர். பின்னர் அவர்கள் நினைத்தார்கள் நாம் ஏன் மேல் ஏறிச்சென்று சிரமப்பட்டு தண்ணீர் கொண்டுவர வேண்டும் கீழே ஒரு ஓட்டையை போட்டால் இலகுவாக எடுத்துவிடலாம் என்று எண்ணி அதை செய்ய துணிகின்றனர். இதை மேலே உள்ளவர்கள் பார்த்துவிட்டு கீழுள்ளவர்கள் அவர்களின் பகுதியில் ஓட்டை இடுகின்றனர் நமக்கென்ன என்று மேலுள்ளவர்கள் இருந்துவிட்டால் 

என்ன நடக்கும் என்று சஹாபாக்களைப்பார்த்து கேட்டார்கள். அதற்கு சஹாபாக்கள் பதிலளித்தார்கள் எல்லோரும் தான் மூழ்குவார்கள்! நபியவர்கள் சொன்னார்கள் ஆம் இது போல்தான் நீங்கள் தீமையை தடுக்காவிட்டால் அது எல்லோரையும் தான் பாத்திக்கும்". 

இப்னு ஹிப்பான்- 301

 

எனவே தீமையை தடுக்காவிட்டால் அது எல்லோரையும் தான் பாதிக்கும். இதில் நமது சுயநலமும் தங்கியுள்ளது. மற்றவர்களை திருத்துவதுடன் அது நம்மையும், நமது குடும்பத்தையும் தாக்குவதிலிருந்து காத்துக்கொள்ளலாம். நாம் ஏன் தொழுகிறோம், நோன்பு நோற்கிறோம், நல்அமல்கள்  செய்கிறோம் என்றால் சுவர்க்கம் செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான். இவைகளை விட பல மடங்கு நன்மை தரக்கூடியது தான் நன்மையை ஏவி தீமையை தடுப்பது. மேலும் தஃவா செய்வதை விட சிறந்த ஒரு அமல் இவ்வுலகில் கிடையாது.

 

ஒருவருக்கு ஒரு நன்மையை கற்றுக்கொடுத்தால் அதன் மூலம் நேர்வழி பெற்றவரின் நன்மை போன்ற நன்மை நமக்கும் கிடைக்கிறது. அந்த நன்மையான காரியத்தை அவர் போய் இன்னும் ஐந்து பேருக்கு சொன்னால் நமக்கு 1+5 =6 பேருடைய நன்மை கிடைக்கும். இப்படியே  அந்த 6 பேறும் போய் 60 பேரிடம் சொல்வார்கள். இவ்வாறு அடுத்தடுத்து வரக்கூடியவர்களுக்கு கியாமத் நாள் வரைக்கும் சொல்லும் போது அதன் மூலம் நமக்குக்கிடைக்கும் நன்மைகள் அளவிட முடியாததாக மறுமையில்  இருக்கும்.

 

ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். "ஒருவர் மரணித்தால் அணைத்து செயல் பாடுகளும் முடிந்து விடுகின்றது. மூன்று காரியங்களைத்தவிர, அவை சாலிஹான குழந்தை, நிலைத்து இருக்கக்கூடிய தர்மம், பயனுள்ள கல்வி" முஸ்லிம்- 1631

 

சாலிஹான குழந்தை தம் பெற்றோருக்கு செய்யும் துஆவை தாம் உயிருடன் இருக்கும் போது துஆ செய்வதைப்போல் அல்லாஹ் எடுத்துக்கொள்கிறான். நாம் மரணித்த பின் அதுவும் அதிக பட்சம் அந்தப்பிள்ளைகள் உயிர் வாழும் காலம்   30-35 வருடங்கள் தான் அதன் பலன் கிடைக்கும். ஆனால் பயனுள்ள கல்வியை போதிப்பது போல் எதுவும் இல்லை. 

 

 

எனவே தான் ரசூல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.  

"நல்லதை ஒருவர் பிறருக்கு அறிவித்துக்கொடுத்தால் அதை செய்தவரின் கூலி போன்றே அறிவித்துக்கொடுத்த வருக்கும் உண்டு. செய்பவர்களின் பங்கில் ஒன்றும் குறையாது" முஸ்லிம்

 

மேலும் நாம் மார்க்க விடயங்களை மற்றவர்களுக்கு சொல்லும் பொழுது, அதில் உள்ள சந்தேகங்களை, அறியாதவற்றை அவர்கள் நம்மிடத்தில் கேட்கும் போது நமக்கும் அவை சம்பந்தமாக ஆராய்வதற்கு தூண்டுதலாக அமைவதால் இது நமது மார்க்க அறிவை வளத்துக்கொள்ளவும், குரான், ஹதீஸுடனான தொடர்பை அதிகப்படுத்திக்கொள்ளவும் பெரிதும் உதவுகிறது. 

 

எனவே நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு தஃவா செய்வோம். நாம் மக்களை தேடிப்போய் தான் சொல்ல வேண்டும் என்றில்லை. நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களிடத்தில் மார்க்க ரீதியான தவர்களைக்கண்டால் சரியானதை சொல்லிக்கொடுக்கலாம். இணையதளங்கள் .  (Web site, face book, viber, what’s up) ஊடாகவும் இன்று இலகுவாக இப்பணியை சரிவரச்செய்யலாம்.


இது நமது மறுமை வாழ்வுக்காக நாம் செய்யக்கூடிய உழைப்பு. எல்லாம் வல்ல அல்லாஹ்  நன்மையை ஏவி தீமையை தடுத்து இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெற்றுக்கொள்ள நமக்கு உதவி செய்வானாக. 

 

 

Slmfc Media Unit 

 

 

News flash

 •  ஜனாஷாவிட்கு செய்ய வேண்டிய கடமைகள்

   

  =========================

  அஸ்ஸலாமு அழைக்கும் 

  ஆண்களுக்கான மார்க்க வகுப்பு 

  திங்கள் கிழமை மாலை 7:30 மணி முதல் 9:30 மணி வரை 

  Langley Green Community Centre ல்

  நடைபெறும் உங்கள் அனைவரையும் 

  அன்புடன் அழைக்கின்றோம்  

Events

Prayer Timetable

 If you cant View this
Download Adobe reader