ஆதரவற்றவர்களை அரவணைப்போம்.

Print

ஆதரவற்றவர்களை அரவணைப்போம்

 

 
 
 அல்ஹம்துலில்லாஹ்
SLMFC இந்த முறையும் பெரியதொரு தொகையை நாங்கள் பராமரிக்கும்அனாதைகளுக்காக அனுப்பியுள்ளோம். பங்களிப்பு செய்தவர்களுக்கும் அதற்கு உதவி ஒத்தாசைசெய்தவர்களுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!

 

அனாதைகளுக்கு உணவளிப்பவர் சொர்க்கத்தில்

நல்லவர்களைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிடும் போது அநாதைகளுக்கு

 உதவிசெய்தவர்கள் என்று குறிப்பிடுகின்றான்.

நல்லோர், குவளையிலிருந்து அருந்துவார்கள். அதில் கற்பூரம் கலந்திருக்கும். ஓர் ஊற்று!

அதில்அல்லாஹ்வின் அடியார்கள் பருகுவார்கள். அவர்கள் (தாம்) இருக்குமிடத்திலிருந்தே அதைப்பெற்றுக் கொள்வார்கள். அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். தீமை பரவிய நாளைப்பற்றி அஞ்சுவார்கள். அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும்உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம்.உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

அல்குர்ஆன் 76:1-9


 

 வாரிசுச் சொத்துக்களை நன்றாக உண்டு வருகிறீர்கள்.

செல்வத்தை அதிகம் விரும்புகிறீர்கள்.

அவ்வாறில்லை! பூமி தூள் தூளாக நொறுக்கப்படும்போது,

(முஹம்மதே!) வானவர்கள் அணி வகுக்க உமது இறைவன் வரும் போது,

அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில்தான் மனிதன் உணர்வான். இந்தப் படிப்பினை எப்படிப் பயன் தரும்?

எனது வாழ்க்கைக்காக (நல்லறங்களை) நான் முற்படுத்தியிருக்கக் கூடாதா'' என்று கூறுகிறான்.

அந்நாளில் அவன் தண்டிக்குமளவுக்கு யாரும் தண்டிக்க முடியாது.

அவன் கட்டுவது போல் யாரும் கட்ட முடியாது.

(அல்குர்ஆன் 89:15,..26)

இவ்வசனங்களில் ஏழைகளுக்கு உணவளிப்பதாலும் அனாதைகளைப் பேணுவதினாலும் நரகிலிருந்து பாதுகாப்புப் பெற்று சுவர்க்கம் கிடைப்பதாக அல்லாஹ் சொல்கிறான்.

மனிதனைச் சோதிக்கும் விதமாகத்தான் செல்வங்களையும் பாக்கியங்களையும் அல்லாஹ் வழங்குகிறான். இதிலிருந்து பொருளாதாரமும் பரிசோதனைதான் என்பதை விளங்க வேண்டும்.

ஒருவனுக்குச் செல்வத்தை அல்லாஹ் கொடுத்திருப்பது பங்களாவில் வசிப்பதற்காகவும் காரில் சுற்றித் திரிவதற்காகவும் மட்டுமல்ல. அனாதைகளை நீங்கள் மதிக்காமல் நடக்கிறீர்கள் என்று எச்சரிப்பதிலிருந்து பொருளாதாரமுள்ளவர்கள் அனாதைகளையும் ஏழைகளையும் தனது பொருளாதாரத்தின் மூலமாக கண்ணியப்படுத்துவதற்காகத் தான் செல்வம் வழங்கப்படுகிறது என்று அல்லாஹ் கூறுகிறான்.

ஏழைகளுக்கு உணவளிக்கத் தூண்டாமலும் இருக்கிறீர்கள். ஆனால் அல்லாஹ் நம்மை நன்றாக வைத்திருக்கிறான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். பொருளாதாரத்தை அளவுக்கு அதிகமாகவே நேசிக்கிறீர்கள். பொருளாதாரத்தை எவ்வளவுக்கு நேசிக்க வேண்டுமோ அதைத் தாண்டி நீங்கள் நேசிக்கிறீர்கள்.

இந்த பூமி தூள் தூளாக நொறுக்கப்படும் நாளில், உனது பங்களாக்களும் அரண்மனைகளும் இருக்காது. அவற்றுடன் நீயும் சேர்ந்து போய்விடுவாய் என்று அல்லாஹ் எச்சரிக்கிறான்.

அனாதைகளையும் ஏழைகளையும் இவ்வுலக வாழ்வில் இருக்கும் காலங்களில் கவனிக்காமல் விட்டவர்களுக்காக இறைவன் மறுமையில் நரகத்தைக் காட்டும்போது, நாம் உலகில் வாழ்கிற போதே ஏழைகளுக்கு எதையாவது கொடுத்துவிட்டு வந்திருக்கலாமே!, அனாதைகளுக்கு ஏதாவது உதவி செய்திருக்காலாமே! என்று தன்னுணர்வு பெற்று புலம்புவான். அப்போது அல்லாஹ் கொடுக்கிற மாதிரி தண்டனையை யாருமே கொடுக்க முடியாது. அந்தளவுக்கு கடும் தண்டனையை அல்லாஹ் கொடுப்பான்.

 

எனவே           சகோதர,         சகோதரிகளே நம்மால் இயன்றளளவு அநாதை களுக்கும் ஏழைகளுக்கும்            உதவி மறுமை          வாழ்கையை வெற்றியாகிகொள்வோம்.

நாங்கள்          பராமரிக்கும் அநாதைகுழந்தைகளுக்கு  உங்களால் இயன்றதை மாதான்தமோ அல்லது வருடத்திக்கு 1-2 முறையாவது கொடுத்துதவுங்கள்.

Jazakallah Hair.

News flash

 •  ஜனாஷாவிட்கு செய்ய வேண்டிய கடமைகள்

   

  =========================

  அஸ்ஸலாமு அழைக்கும் 

  ஆண்களுக்கான மார்க்க வகுப்பு 

  திங்கள் கிழமை மாலை 7:30 மணி முதல் 9:30 மணி வரை 

  Langley Green Community Centre ல்

  நடைபெறும் உங்கள் அனைவரையும் 

  அன்புடன் அழைக்கின்றோம்  

Events

Prayer Timetable

 If you cant View this
Download Adobe reader