கலாசார சீரழிவு தினம்

Print

  

 கலாசார சீரழிவு தினம்

தினந்தோறும் நடந்து வரும் பல்வேறு விதமான கலாசார சீர்கேடுகள் கணக்கின்றி அதிகரித்த வண்ணமுள்ளன. நாகரீக உலகில் வாழ்கிறோம் என்று பெருமை பட்டுக் கொள்ளும் மனிதன் தன் அறிவை அடகு வைக்கும்  பல காரியங்களை எந்த வித சலனமுமின்றி  செய்துவருகிறான். போதாக் குறைக்கு மீடியாக்கள் இத்தகைய அசிங்கங்களை அழகாககி காட்டிக் கொண்டிருக்கிறது இந்த வரிசையில் ஒன்றுதான் "காதலர் தினம்" (valentine Day) 

 

வேலன்டைன் என்ற ரோமைச் சேர்ந்த   ஒரு கிறிஸ்தவ மத போதகர் அன்றைய ஆட்சியாளர்களின் திருமணத் தடைக்கு எதிராக குரல் கொடுத்து சிலரை திருமணமும் செய்து வைத்ததன் பேரில் அவர் கொள்ளப் பட்டதாகக் கூறப்படும் நாளை இவர்கள் கொண்டாடுகிறார்கள். வேடிக்கை என்னவென்றால் அவர்  திருமணத்தை ஆதரித்ததை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் girl friend /boy friend என்ற விபச்சார   உறவை ஊக்குவிக்க  வர்த்தக நிறுவனங்களும் மீடியாக்களும் போட்டி போடுகின்றன.

 

 

இந்த மாய வலையில் சிக்கி தன் ஈமானைப் பறிகொடுக்கும் எத்தனையோ முஸ்லிம் இளைஞர்  யுவதிகள் இதன் பாதிப்புகளை உணராமல் ஏதோ மார்க்க கடமை போல் ஒருவரையொருவர் வாழ்த்துவதும் கார்டு கொடுப்பதும் பூ, சாக்லேட் பரிமாறிக் கொள்வதும் சர்வசாதாரண நிகழ்வுகளாகிவிட்டன.

 

விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6243

 

காதல் என்ற பெயரில் அரங்கேறும் அனாச்சாரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல எத்தனையோ பெண்களும் ஆண்களும் கற்பை இழந்து கைசேதப்படுகின்றனர் மேற்கத்திய நாட்டில் இதுவெல்லாம் சாதாரணமாகி கலாசார சீர்கேட்டில் உச்ச நிலையில் உள்ளனர். ஆனால் தற்போது இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலும் இந்த நோய் பரவியதன் விளைவு பல தற்கொலைகளும் தலைகுனிவும்
அதிகரித்துள்ளன வீட்டை விட்டு ஓடிபோகும் பிள்ளைகளால் பெற்றோர்கள் அவமானப்பட்டு நிற்கின்றனர் இன்னும் சொல்லிக்கொண்டே போகும் அளவுக்கு பட்டியல் நீள்கிறது

 


இந்த மாற்று மதக் கலாசாரத்தை பின்பற்றுவதால் இத்தனை அனாச்சரத்துக்கும் துணை செய்த பாவம் நம்மை வந்தடையும் எனவே இதிலிருந்து வல்ல அல்லாஹ் நம்மனைவரையும் காப்பானாக!  

News flash

 •  ஜனாஷாவிட்கு செய்ய வேண்டிய கடமைகள்

   

  =========================

  அஸ்ஸலாமு அழைக்கும் 

  ஆண்களுக்கான மார்க்க வகுப்பு 

  திங்கள் கிழமை மாலை 7:30 மணி முதல் 9:30 மணி வரை 

  Langley Green Community Centre ல்

  நடைபெறும் உங்கள் அனைவரையும் 

  அன்புடன் அழைக்கின்றோம்  

Events

Prayer Timetable

 If you cant View this
Download Adobe reader