Print

துஆக்கள்

 தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ


அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ப(இ)ஃத மா அமா(த்)தனா
வ இலைஹின் னுஷுர்

இதை தூங்கி எழுந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.
ஆதாரம்: புகாரி 6312, 6314, 6324, 6325, 7395


இதன் பொருள்:


எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.
மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.


காலையிலும், மாலையிலும் ஓத வேண்டிய துஆ

காலையிலும், மாலையிலும், படுக்கைக்குச் செல்லும் போதும் நான் என்ன கூற
வேண்டும் என அபூபக்ர் (ரலி) கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் பின் வரும் துஆவைக் கற்றுக் கொடுத்தார்கள். ஆதாரம்: அஹ்மத் 49, 60, 77

அல்லாஹும்ம பா(எ)(த்)திரஸ் ஸமாவாத்தி வல் அர்ளி, ஆலிமல் ஃகைபி(இ)
வஷ்ஷஹாத(த்)தி, ரப்ப(இ) குல்லி ஷையின் வமலீ(க்)கஹு, அஷ்ஹது அன்
லாயிலாஹ இல்லா அன்(த்)த, அவூது பி(இ)(க்)க மின் ஷர்ரி நப்(எ)ஸீ வஷர்ரிஷ்
ஷைத்தானி வஷிர்கிஹி


இதன் பொருள்:

இறைவா! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானதையும்,
வெளிப்படையானதையும் அறிபவனே! அனைத்துப் பொருட்களின் அதிபதியே! அரசனே!
வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாருமில்லை எனது மனோ இச்சையின்
தீங்கை விட்டும் ஷைத்தானின் தீங்கை விட்டும் உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்.


________________________________________
தினமும் ஓத வேண்டிய துஆ

பின் வரும் துஆவை யார் தினமும் நூறு தடவை ஓதி வருகிறாரோ அவருக்கு பத்து
அடிமைகளை விடுதலை செய்த நன்மைகள் கிடைக்கும். மேலும் அவருக்கு நூறு
நன்மைகள் பதிவு செய்யப்படும். அவரது நூறு தீமைகள் அழிக்கப்படும். அன்று மாலை
வரை ஷைத்தானிடமிருந்து பாதுகாப்பும் கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
ஆதாரம்: புகாரி 3293

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு
வலஹுல் ஹம்து, வஹு அலா குல்லி ஷையின் கதீர்.


இதன் பொருள்:

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு
நிகரானவன் இல்லை. ஆட்சி அவனுக்குரியதே. புகழும் அவனுக்குரியதே. அவன் அனைத்துப்
பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.


________________________________________

கழிவறையில் நுழையும் போது


اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ
அல்லாஹும்ம இன்னீ அவூது பி(இ)(க்)க மினல் குபு(இ)ஸி வல் கபா(இ)யிஸி. ஆதாரம்: புகாரி 6322

இதன் பொருள் :

இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

________________________________________
கழிவறையிலிருந்து வெளியேறும் போது


غُفْرَانَكَ


ஃகுப்(எ)ரான(க்)க ஆதாரம்: திர்மிதீ 7
உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன்.

________________________________________
வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கீழ்க்காணும்
துஆவைக் கூறுவார்கள். ஆதாரம்: நஸயீ 5391, 5444
பி(இ)ஸ்மில்லாஹி ரப்பி(இ) அவூது பி(இ)(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம
அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய

இதன் பொருள்:

அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும்,
வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும்,
(பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

source: www.frtj.net
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

News flash

 •  ஜனாஷாவிட்கு செய்ய வேண்டிய கடமைகள்

   

  =========================

  அஸ்ஸலாமு அழைக்கும் 

  ஆண்களுக்கான மார்க்க வகுப்பு 

  திங்கள் கிழமை மாலை 7:30 மணி முதல் 9:30 மணி வரை 

  Langley Green Community Centre ல்

  நடைபெறும் உங்கள் அனைவரையும் 

  அன்புடன் அழைக்கின்றோம்  

Events

Prayer Timetable

 If you cant View this
Download Adobe reader