Example of Category Blog layout (FAQs/General category)

எச்சரிக்கை !!! மீண்டும் பகல் கொள்ளை

Print

இம்மாதம் பரவலாக crawley இன்  பல பகுதிகளில் பகல் திருட்டு நடைபெற்றுள்ளது கடந்த ஆகஸ்ட் 12 ஆம் திகதி pound hil lபகுதியில்   5 வீடுகளில் பணம்,  நகை, பாஸ்போர்ட் போன்றவை பட்டப்பகலில் திருடப்பட்டுள்ளதாக crawley நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது 

இந்த திருட்டுக்கள் யாவும் காலை 8:20 மணி தொடக்கம் பகல் 2:30 மணிக்குள் வீட்டு உரிமையாளர்கள் வெளியே சென்று விட்டு வீடு திரும்புவதற்குள் இடம்பெற்றுள்ளதால் இவற்றை கவனமாக அவதானித்திருந்தே இந்த திருடர்கள் தங்கள் காரியத்தை கட்சிதமாக முடித்துள்ளதாக போலீஸ் கான்ஸ்டபல் andrew robinson தெரிவித்துள்ளார் 

எனவே சந்தேகத்திற்கிடமாக எவரும் வீட்டின் வெளியே தனியாக அல்லது வாகனத்தில் நீண்டநேரம் காத்திருப்பதை அவதானித்தால் உடனே போலீஸ் இற்கு அறிவிக்குமாறு பொது மக்கள் வேண்டப்பட்டுள்ளனர் 

call emergency 999 or  non urgent call 101

 

 

மேலும் இது summer காலமாக இருப்பதால் வீடுகளில் பொதுவாக ஜன்னல்கள் கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருக்கும் ஆனால் வெளியே செல்லும்போது கண்டிப்பாக பாத்ரூம் toilet உள்ளிட்ட சகல கதவுகளையும் ஜன்னல்களையும் மூடிவிட்டுச் செல்வதே பாதுகாப்பானது 

மேலும் இஸ்லாம் காட்டித்தந்த முறையில் வீட்டை விட்டு வெளியேறும் போது ஓத வேண்டிய துஆக்களை மனனமிட்டு அல்லது கதவுக்கருகே  பார்த்து ஓதும் விதமாக ஒட்டி வைத்து ஓதுவதன் மூலம் இன்ஷா அல்லாஹ் இறைவனின் மகத்தான பாதுகாப்பை பெறலாம் 

Crawley News செய்தியைப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் 

http://www.crawleynews.co.uk/Burglars-raid-5-homes-Pound-Hill/story-19669839-detail/story.html

வீட்டை விட்டு வெளியேறும் பொது ஓதவேண்டிய துஆ 

بِسْمِ اللهِ رَبّ أَعُوْذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கீழ்க்காணும்

துஆவைக் கூறுவார்கள். ஆதாரம்: நஸயீ 5391, 5444
பி(இ)ஸ்மில்லாஹி ரப்பி(இ) அவூது பி(இ)(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம
அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய

இதன் பொருள்:

அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும்,
வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும்,

(பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.