General Meeting

Print

வெற்றிகரமாக நடந்தேறிய விஷேட பொதுக்கூட்டம் 


வஹீ ட்டுமே மார்க்கம் எனும் தூய இஸ்லாத்தின் கொள்கையை 
அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் எமது அமைப்பு அண்மையில் இதே கொள்கையை அடிப்படியாகக் கொண்டியங்கும் பேரியக்கமான தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ கிளையாக இணைந்து கொண்டதையடுத்து ஸ்ரீலங்கன் முஸ்லிம் பவுண்டேசன் குறோளி அமைப்பின் சகல அங்கத்தவர்களுக்கும் இது பற்றிய மேலதிக விளக்கமளிக்கும் விஷேட பொதுக்கூட்டம் இன்று (05 /01 /2014 ) அல்லாஹ்வின் பேரருளால்   வெகு சிறப்பாக நடந்தேறியது 
 
லுஹர் தொழுகையுடன் ஆரம்பமான நிகழ்ச்சியில் பகலுணவைத் தொடர்ந்து அசர் தொழுகையும் அதனைத் தொடர்ந்து TNTJ இன் மாநிலத் தலைவர் சகோதரர் P ஜெய்னுலாபிதீன் (PJ ) அவர்கள் ஆன்லைன் வழியாக கலந்துகொண்டு "ஏன் tntj உடன் இணைந்திருக்க வேண்டும் " என்ற தொனிப்பொருளில் ஏனைய இயக்கங்களுக்கிடையிலான வேறுபாட்டை விளக்கி உரை நிகழ்த்தினார்  அதனைத் தொடர்ந்து அங்கத்தவர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தெளிவான பதில்களை வழங்கினார் அதனையடுத்து  SLMFC இன் தலைவர் இன்றைய பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதன் நோக்கத்தை விளக்கியதன் பின்னர் அங்கத்தவர்களுக்கு நிர்வாகத்திடம் கேள்வி கேட்பதற்கும் அவர்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டது 
நிகழ்சிகள் யாவும் இஷாத் தொழுகையுடன் இனிதே நிறைவு பெற்றது